[X] Close

ஜீலம் நதியில் எச்சரிக்கை அளவை மீறிய வெள்ளம்:தப்பியது ஸ்ரீநகர்


  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 12:51 pm
  • அ+ அ-

-ஐஏஎன்எஸ்

காஷ்மீர் இடைவிடாத மழை காரணமாக மழை காரணமாக, ஜீலம் ஆற்றில் வெள்ள நீர் 18 அடி உயரத்தைத் தாண்டியது, மிதமான வானிலையால் ஸ்ரீநகர் தப்பியது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீரில் இடைவிடாது பெய்துவரும் மழை பற்றி அதிகாரிகள் தெரிவித்த விவரம்:

சோனாமர்க்கில் முன்னொருபோதும் இல்லாத பனிப்பொழிவும் ஜீலம் நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான தெற்குக் காஷ்மீரில் கடும் மழைப்பொழிவும் உள்ளதால் நீர்த்தேக்கங்களும் ஏரிகளும் ஆறுகளும் பள்ளத்தாக்கில் உள்ள நீரோடைகளிலும் நீர் நிரம்பிவழிந்து வருகின்றன.

பந்திப்போரா மற்றும் டாங்மார்க் பகுதகளில் உள்ள மலை நீரோடைகளில் கட்டப்பட்ட பாலங்கள் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டன. பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஆப்பிள் பழத்தோட்டங்கள் அழிக்கப்பட்டன.

கடந்த 12 மணி நேரத்தில் மிதமான வானிலை காரணமாக ஸ்ரீநகரில் வரவிருக்கும் வெள்ளப் பெருக்கு ஆபத்து தடுக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு பள்ளத்தாக்கில் வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளதாக காஷ்மீர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சோனமார்க்கிலும், பால்தலிலும். நேற்றிரவு (புதன்கிழமை) மேய்ச்சல் நிலப் பகுதிகளில் மின்னல் தாக்கியதால் சுமார் 100 ஆடுகள் கொல்லப்பட்டன.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேய்ப்பர்கள் ஆடுகளைத் திறந்தவெளி பட்டிகளில் அடைத்து வைத்திருந்தனர். அப்போது பால்தலிலும் சோனாமர்க்கிலும் அதிகப் பனிப்பொழிவு இருந்தது. பனிப்பொழிவைத் தொடர்ந்து மின்னல்களும் தாக்கியதால் கால்நடைகள் கொல்லப்பட்டதாக போலீஸார் ஒருவர் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close