[X] Close

பஞ்சாப்பில் 100க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மூடல்: 2 வயது சிறுவன் மரணத்துக்குப் பிறகு முதல்வர் உத்தரவு


100-2

  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 18:10 pm
  • அ+ அ-

-பிடிஐ

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவனை மிகப்பெரிய அளவில் முயற்சித்து மீட்டபோதும் அச்சிறுவன் இறந்ததை அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் திறந்த நிலையில் உள்ள 100 ஆழ்துளைக் கிணறுகளை மூடும்படி முதல்வர் அமரிந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

சங்கூர் மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து அதில் சிக்கிக்கொண்ட சிறுவனை செவ்வாய்க்கிழமை உயிரோடு மீட்டனர். எனினும் நான்கு நாட்கள் நடந்த இந்த மீட்புப் பணியின் இறுதியாக சோகமே மிஞ்சியது.

இதனால் மாநிலம் முழுவதும் திறந்த நிலையில் உள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் மூடும்படி துணை ஆணையர்களிடம் அறிக்கைகளைப் பெற்ற பிறகு முதல்வர் உத்தரவிட்டார்.

திறந்த கிணறுகளை மூடுவதற்கான வேலை நாட்கள் இன்னும் இரண்டு நாட்களுக்குத் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல்வேறு மாவட்ட அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி, பதிட்டாவில் 50 ஆழ்துளைக் கிணறுகளும் பாட்டியாலாவில் 18 கிணறுகளும் திறந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டு அவை உடனடியாக மூடப்பட்டதாக அறிக்கைகள் வந்துள்ளதாக பாதிண்டா துணை ஆணையர் பி.ஸ்ரீனிவாசன் பிடிஐயிடம் இன்று தெரிவித்தார்.

பதேகர் சாஹிப் மாவட்டத்தில் திறந்த நிலையில் இருந்த 26 ஆழ்துளைக் கிணறுகளும் மான்ஸாவில் 8, கபூர்தலாவில் 3, குர்தாஸ்பூரில் 2 மற்றும் ரூப்நகர் மற்றும் ஹஷியார்பூர் மாவட்டங்களில் தலா 1 ஆகியனவும் உடனடியாக மூடப்பட்டதாகவும் அப்பகுதி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சங்ரூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த 150 அடி ஆழ்துளைக் கிணறு ஒன்றில் விழுந்த 2 வயது சிறுவன் பஃதேவிர் சிங்கை மீட்பதற்கான நடவடிக்கை கிட்டத்தட்ட 109 மணிநேரம் நீடித்தது. ஆனால், பஃதேவிரை உயிருடன் மீட்க முடியவில்லை.

பஃதேவிர் சிங் மரணத்தை அடுத்து பஞ்சாம் அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி அளித்தன. இதனால் உடனடியாக ஆழ்துளைக் கிணறுகளை மூடும் அவசர உத்தரவை அரசாங்கம் பிறப்பித்தது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close