[X] Close

கோட்சே, பிரக்யா சிங்கை மதரஸா உருவாக்கவில்லை: மத்திய அரசுக்கு சமாஜ்வாதி கட்சி கண்டனம்


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 12:41 pm
  • அ+ அ-

நாதுரம் கோட்சே, பிரக்யா சிங் தாகூர் போன்றவர்களை எந்த மதரஸாவும் உருவாக்கவில்லை. எனவே மதரஸா பற்றி மோசமான பிம்பத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டாம் என சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம்கான் கூறியுள்ளார்.

மதரஸா திட்டம் அடுத்த மாதம் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி ‘‘நாடு முழுவதும் மதரஸா ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இந்தி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், கணினி அறி வியலில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இதன்மூலம் மதரஸா மாணவர்கள் பயன் பெறுவார்கள். சிறுபான்மையினரின் கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்க்கை மேம்பாடு உறுதி செய்யப்படும்’’ என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம்கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

‘‘மதரஸாவில் மதக்கல்வி அளிப்பது உண்மை தான். ஆனால் அங்கு ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளும், கணக்கு உள்ளிட்ட வேறு சில பாடங்களும் கூட கற்பிக்கப்படுகிறது. மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான பாடங்கள் சொல்லிக்கொடுக்கப்படுகிறது.

உண்மையிலேயே மதரஸாக்களுக்கு உதவும் எண்ணம் மத்திய அரசுக்கு இருந்தால் அவற்றுக்கு தேவையான பொருட்கள், மதிய உணவு வழங்குதல் போன்ற நடவடிக்கையை எடுக்கலாம்.

நாதுரம் கோட்சே, பிரக்யா சிங் தாகூர் போன்றவர்களை எந்த மதரஸாவும் உருவாக்கவில்லை. எனவே மதரஸா பற்றி மோசமான பிம்பத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டாம். ஜனநாயகத்துக்கு விரோதமாக செயல்படும் இதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து விட்டு மதரஸாவை அவர்கள் சரி செய்யட்டும்.’’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close