[X] Close

அமிதாப் ட்விட்டர் பக்கத்தில் ஊடுருவிய துருக்கி ஹேக்கர்கள்: பாக். பிரதமர் இம்ரான் கான் படம் பதிவேற்றம்


  • kamadenu
  • Posted: 12 Jun, 2019 09:48 am
  • அ+ அ-

பிரபல நடிகர் அமிதாப் பச்சனின் ட்விட்டர் பக்கத்தில் ஊடுருவிய துருக்கி ஹேக்கர் குழு, அவரது படத்தை நீக்கிவிட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் படத்தை பதிவேற்றம் செய்தது.

அமிதாப் பச்சனின் ட்விட்டர் பக்கத்தில் அய்யில்திஸ் டிம் என்ற நபர் நேற்று முன்தினம் இரவு ஊடுருவி உள்ளார். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற, துருக்கியின் ஹேக்கர் குழுவைச் சேர்ந்தவர் என அறிவித்துள்ள அவர், அமிதாப் முகப்பு படத்தை நீக்கிவிட்டு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் படத்தைப் பதிவேற்றம் செய் திருந்தார். மேலும் அதனுடன் ‘லவ் பாகிஸ்தான்’ என குறிப்பிட்டு துருக்கி நாட்டு தேசிய கொடியின் எமோஜியையும் இந்தியாவுக்கு எதிரான சில கருத்துகளை யும் பதிவிட்டிருந்தார்.

“உலகம் முழுவதுக்கும் இது முக்கியமான அழைப்பு. துருக்கி கால்பந்து வீரர்களுக்கு எதிரான ஐஸ்லாந்தின் நடவடிக்கையை கண்டிக்கிறோம். நாங்கள் மென் மையாக பேசுவோம். ஆனால் பெரிய அளவில் இணையதள தாக் குதல் நடத்துவோம். அய்யில்திஸ் டிம் துருக்கி சைபர் ஆர்மி” என பதிவிடப்பட்டிருந்தது.

மற்றொகு பதிவில், “தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் இணைப்பை பதிவிட்டு, உங்கள் ஆதரவுக்காக காத்திருக்கிறோம்” என கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த அமிதாப் பச்சன், தொழில்நுட்பக் குழுவினரின் உதவியுடன் அடுத்த 30 நிமிடங்களில் தனது ட்விட்டர் பக்கத்தை மீட்டெடுத்தார்.

இதுகுறித்து இணையதள குற்றப் பிரிவுக்கு (சைபர்) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விசாரணை நடத்தி வருவதாகவும் மும்பை காவல் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதே குழுவைச் சேர்ந்தவர் கள், ஷாஹித் கபூர் மற்றும் அனுபம் கெர் உள்ளிட்ட நடிகர்களின் ட்விட் டர் பக்கத்திலும் ஏற்கெனவே ஊடுருவி உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close