[X] Close

மாநிலங்களின் வளர்ச்சிக்கு உதவ மத்திய அரசு தயாராக உள்ளது: திருப்பதியில் பிரதமர் மோடி பேச்சு


  • kamadenu
  • Posted: 09 Jun, 2019 19:39 pm
  • அ+ அ-

மாநிலங்களின் வளர்ச்சிக்கு உதவ மத்திய அரசு தயாராக உள்ளது, மத்திய அரசுடன் இணைந்து மாநிலங்கள் பொருளாதார முன்னேற்றம் பெற வேண்டும் என திருப்பதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

பிரதமராக மோடி 2-வது முறையாக கை பொறுப்பு ஏற்றுக்கொண்ட பின், மாலத்தீவுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். மாலத்தீவு அதிபர் முகமது இப்ராஹிம் சோலிஹ்குடன் பேச்சு நடத்தினார்.

பின்னர் மாலத்தீவுகளில் இருந்து இன்று காலை இலங்கை தலைநகர் கொழும்பு நகருக்கு விமானம் மூலம் வந்தார். அவரை விமானநிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வரவேற்றார்.

அதன்பின் அங்கிருந்து அதிபர் மாளிகைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள புனித அந்தோனி தேவாலாயத்துக்கு பிரதமர் மோடி சென்றார். ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று மாலை நாடு திரும்பினார். அவர் டெல்லி செல்லாமல் நேரடியாக திருப்பதி வந்தார்.

modi1.JPG 

பிரதமர் மோடியை ஆந்திர ஆளுநர் நரசிம்மன், மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.  அதனைதொடர்ந்து ரேணிகுண்டாவில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

மத்தியில் மீண்டும் பாஜக அரசு அமைவதற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. மத்தியில் வலுவான ஆட்சி அமைவதற்கு நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ தயாராக உள்ளது. மத்திய அரசுடன்  இணைந்து மாநில அரசுகளும் பணியாற்ற வேண்டும்.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும். பாஜக விரைவில் ஆந்திராவிலும், தமிழகத்திலும் வெற்றிக் கொடியை ஏற்றும்

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து திருப்பதி கோயிலில் பிரதமர் மோடி  தரிசிக்கிறார். பிரதமர் மோடி வருகையொட்டி திருமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close