[X] Close

பிரக்யாவுக்கு உடல் நலக் குறைவு; மருத்துவமனையில் அனுமதி: நீதிமன்றத்தில் இன்று ஆஜராவாரா?


  • kamadenu
  • Posted: 07 Jun, 2019 09:18 am
  • அ+ அ-

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சாத்வி பிரக்யா சிங் தாக்குர் உட்பட 7 பேர் மீது மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாரம் ஒருமுறை ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. போபால் எம்பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட தனக்கு நாடாளுமன்ற பணிகள் உள்ளதால் இந்த வாரம் ஆஜராக விலக்கு அளிக்குமாறு பிரக்யா சிங் கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

பிரக்யா சிங்குக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதால் அவரால் மும்பை வரமுடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். நேற்று மட்டும் விலக்கு அளிப்பதாக கூறிய நீதிபதி, இன்று (வெள்ளிக்கிழமை) பிரக்யா சிங் ஆஜராக வேண்டும் என்றும் தவறினால் விளைவுகளை அவர் சந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, வயிற்றுக் கோளாறு காரணமாக பிரக்யா சிங் நேற்று முன்தினம் இரவு போபாலில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதால் நேற்று கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு மீண்டும் அவர் மருத்துவமனைக்கு திரும்பினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மும்பை நீதிமன்றத்தில் பிரக்யா சிங் இன்று ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close