[X] Close

21-ம் தேதி சர்வதேச யோகா தினம்: யோகா பயிற்சி செய்ய மோடி வேண்டுகோள்


21

  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 10:05 am
  • அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படும் என்று ஐ.நா.சபை அறிவித்தது. அதன்படி, 2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வாரு ஆண்டும் மக்களுடன் பிரதமர் மோடியும் இவ்விழாவில் பங்கேற்று யோகாசனங்களை செய்வது வழக்கம். இந்த ஆண்டு டெல்லி, சிம்லா, மைசூர், அகமதாபாத், ராஞ்சி ஆகிய நகரங்களில் ஏதாவது ஒன்றில் யோகா தின விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை செய்ய இருக்கிறார்.

யோகா தினத்துக்கு முன்னோட்டமாக பிரதமர் மோடி ட்விட்டரில் சிறிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் திரிகோண ஆசனம் என்ற யோகா பயிற்சி செய்வது போன்ற கார்டூன் காட்சிகள் உள்ளன. மேலும், அந்தப் பதிவில் மோடி கூறுகையி்ல், ‘‘யோகா பயிற்சியை ஒவ்வொருவரும் தினமும் மேற்கொள்ள வேண்டும்.

யோகா பயிற்சியை உங்கள் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள் அதனால், கிடைக்கும் பலன்கள் அளவற்றவை. யோகா உங்களுக்கு நன்மையைத் தரும். வரும் 21-ம் தேதி நாம் அனைவரும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்போம். நீங்களும் யோகா செய்யுங்கள். மற்றவர்களுக்கும் யோகா பயிற்சி செய்ய முன்மாதிரியாக இருங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close