[X] Close

இயற்கையுடன் இணைந்தால் சிறந்த எதிர்காலம்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்


  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 09:46 am
  • அ+ அ-

‘‘இயற்கையுடன் இணக்கமாக வாழ்ந்தால், சிறந்த எதிர்காலத்துக்கு வழிவகுக்கும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி கொண்டாடப்பட்டது. அதன்படி, நேற்று உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு, ‘காற்று மாசுபாட்டை விரட்ட வேண்டும்’ என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த இலக்குடன் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை சீனா தலைமையில் உலக நாடுகள்எடுக்க உள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது:நமது பூமி மற்றும் சுற்றுச்சூழலை நாம் சிறந்த முறையில் போற்றி வருகிறோம். தூய்மையான பூமியை உறுதி செய்வதில் நாம் முனைப்புடன் செயலாற்றி வருவதை மீண்டும் வலியுறுத்துகிறாம். இயற்கையுடன் இணைந்து வாழ்வது, சிறந்த எதிர்காலத்துக்கு வழிவகுக்கும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

மேலும், சுற்றுச்சூழலை வலியுறுத்தி, ட்விட்டரில் பிரதமர் மோடி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், ‘‘சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகள் நடுவது மட்டும் போதாது. அந்த மரக்கன்றுகள் வளர்ந்து மரமாகும் வரை அவற்றை கண்காணித்து பராமரிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி உள்ளார்.

சிறந்த எதிர்காலத்தை உருவாக்க மக்கள் அதிகமான மரக்கன்றுகளை நடவேண்டும். இயற்கையை தெய்வமாக வணங்கும் சமூகத்தில்தான் நாம் பிறந்து வளர்ந்திருக்கிறோம். எனவே, இந்த பூமியை மேலும் பசுமையாக்குவது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும். மழைக்காலம் தொடங்க போகிறது. இந்த சூழ்நிலையில், மரக்கன்றுகள் வரும் ஆண்டுகளில் வளர்ந்த மரமாவதை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நாம் அனைவரும் இயற்கையுடன் நம்மை இணைத்துக் கொள்ள வேண்டும்.

செல்பி விழிப்புணர்வுமுன்னதாக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடுவதை ஊக்குவிக்கும் வகையில், ‘மரக்கன்றுகளுடன் செல்பி’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய அரசு நேற்று காலை தொடங்கி வைத்தது. இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ட்விட்டரில் ‘செல்பி வித் சேப்லிங்’ என்ற பதிவை வெளியிட்டார்.

மேலும், தூய்மையான நீடித்த பூமியை உறுதிப்படுத்த அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தி உள்ளார்.- பிடிஐ

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close