[X] Close

காற்று மாசுபாட்டால் ஆண்டுதோறும் 5 வயதுக்கு உட்பட்ட 1 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு


5-1

  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 09:37 am
  • அ+ அ-

‘‘இந்தியாவில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் 5 வயதுக்கு உட்பட்ட ஒரு லட்சம் குழந்தைகள் இறக்கின்றன’’ என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ‘சென்டர் பார் சயின்ஸ் அண்ட் என்விரான்மென்ட்’ (சிஎஸ்இ)என்ற அமைப்பு இந்தியாவில் சுற்றுச்சூழல் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:காற்று மாசுபாடு தேசிய அவசர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 5 வயதுக்கு உட்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், காற்று மாசுபாட்டால் உயிரிழக்கின்றன. மேலும், இந்தியாவில் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில், காற்று மாசுபாட்டால் மட்டும் 12.5 சதவீதம் பேர் இறக்கின்றனர்.

பத்தாயிரம் குழந்தைகளில் 8.5 சதவீதம் குழந்தைகள் 5 வயதை அடைவதற்குள் காற்று மாசால் இறந்து விடுகின்றன. இந்த எண்ணிக்கை பெண் குழந்தைகள் விஷயத்தில் அதிகமாக உள்ளது. பத்தாயிரம் பெண் குழந்தைகளில், அசுத்தமான காற்றால் இறக்கும் சதவீதம் 9.6 ஆக உள்ளது.

காற்று மாசுபாட்டை குறைக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் இதுவரை வெற்றி பெறவில்லை. இதை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகமும் ஒப்புக் கொண்டுள்ளது. எதிர்பார்த்த அளவுக்கு சுற்றுச்சூழல் மாசு தடுப்பு நடவடிக்கைகள் மகிழ்ச்சிகரமாக இல்லை என்று அந்தத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் சமீபத்தில் கூறியுள்ளார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.- பிடிஐ

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close