[X] Close

உடல் நலம் குன்றிய முஸ்லிம் டிரைவருக்குப் பதிலாக ரம்ஜான் நோன்பு மேற்கொள்ளும் இந்து மேலதிகாரி: மதநல்லிணக்கத்தின் உயரிய சாட்சி


  • kamadenu
  • Posted: 31 May, 2019 13:59 pm
  • அ+ அ-

-ஏஎன்ஐ

மகாராஷ்டிரா மாநிலத்தில் உடல் நலன் குன்றிய தனது கார் ஓட்டுநருக்குப் பதிலாக ரம்ஜான் நோன்பு மேற்கொண்டுள்ளார் அவருடைய உயரதிகாரி.

மதநல்லிணக்கத்தின் உயரிய சாட்சியாக இருக்கும் இந்த அன்பின் வெளிப்பாடு அந்த ஊர் மக்களால் கொண்டாடப்படுகிறது,

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தின் வட்டார வன அலுவலர் சஞ்சய் என்.மாலி. இவரது கார் ஓட்டுநார் ஜஃபார். இவர் இஸ்லாமியர்.

ரம்ஜான் நோண்பு தொடங்கிய நாளில், ஜஃபாரிடம் மாலி நீங்கள் நோன்பு வைக்கவில்லையா எனக் கேட்டுள்ளார். அதற்கு ஜஃபார் உடல் நலிவடைந்து உள்ளது அதுவும் பணிச்சுமை வேறு வாட்டுகிறது அதனால் நோன்பு வைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

உடனே சஞ்சய் மாலி, உங்களுக்காக நான் ரம்ஜான் நோண்பு மேற்கொள்கிறேன் எனக் கூறி இன்று வரை நோன்பை கடைபிடித்து வருகிறார்.

இது குறித்து சஞ்சய் மாலி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, "மே 6-ம் தேதி முதல் நான் நோண்பு மேற்கொண்டுள்ளேன். தினமும் காலை 4 மணிக்கு எழுந்து கொள்கிறேன். என்ன இருக்கிறதோ அதை சாப்பிடுகிறேன். பின்னர் மாலை 7 மணியளவில் நோண்பை துறந்துவிடுகிறேன்.

மத நல்லிணக்கத்தைப் பரப்ப ஒவ்வொரு தனிநபரும் ஏதாவது செய்ய வேண்டும் எனக் கருதுபவன் நான். அதனாலேயே இந்த வாய்ப்பு மத நல்லிணக்கத்துக்கான உன்னதமான சாட்சி என நான் நம்புகிறேன்.

எல்லா மதங்களும் நற்பண்புகளையே போதிக்கின்றன. மனிதர்கள் நாம் மதநல்லிணக்கத்தை பரவச் செய்ய வேண்டும்.

முதலில் மனிதத்தையும் அதன் பின்னர் மதத்தையும் பார்ப்போம். இத்தனை நாட்கள் நோண்பு மேற்கொண்டதன் விளைவாக நான் புத்துணர்ச்சி பெற்றதாக உணர்கிறேன்" என்றார்.

இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை ஜூன் முதல் வாரத்தில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close