[X] Close

ஜஸ்வந்த் சிங் மகனை வீழ்த்திய கைலாஷ் சவுத்திரி: மத்திய அமைச்சர் பதவி வழங்கினார்  பிரதமர் மோடி


  • kamadenu
  • Posted: 31 May, 2019 10:23 am
  • அ+ அ-

ராஜஸ்தான் மாநிலத்தில், மக்களவைத் தேர்தலில் வீழ்த்த முடியாத நபராக கணிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மகன் மனவேந்திர சிங்கை வீழ்த்திய பாஜகவின் கைலாஷ் சவுத்திரிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கி பிரதமர் மோடி கவுரவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலத்தை காட்டிலும் அதிக தொகுதிகளில் அக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவில் மோடிக்கு, குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த் பிரதமராக பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 2-வது முறையாக பிரதமர் ஆனார்.

பாரதிய ஜனதாவைச் சேர்ந்தவர்களுடன் சிவசேனா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இவர்களில் ராஜஸ்தான் மாநிலம் கைலாஷ் சவுத்திரியும் ஒருவர். அம்மாநிலத்தின் மிகப்பெரிய தொகுதியான பார்மரில் இருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அம்மாநில எம்எல்ஏவாக இருந்து அனுபவம் வாய்ந்த கைலாஷ் சவுத்திரி, மக்களவைத் தேர்தலில் முன்னாள் நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மனவேந்திர சிங்கை எதிர்த்து போட்டியிட்டு வென்றார்.

மனவேந்திர சிங் பாஜகவில் இருந்தநிலையில், கடந்த ஆண்டு கட்சியில் இருந்து வெளியேறினார். 2014-ம் ஆண்டு தனது தந்தையை பாஜகவில் இருந்து ஓரம்கட்டப்பட்டதாகவும், மூத்த  தலைவரான அவரை மோடி திட்டமிட்டு வெளியேற்றியதாகவும் அவர் புகார் தெரிவித்தார். மோடியும், அமித் ஷாவும் தங்களை சுயமரியாதை இன்றி நடத்துவதாகவும் கூறி இருந்தார்.

இதன் பிறகு காங்கிரஸில் சேர்ந்த அவர், தங்கள் சொந்த தொகுதியான பார்மரில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். பார்மர் தொகுதியை பொறுத்தவரை ஜஸ்வந்த சிங்கின் குடும்பத்தின் செல்வாக்கு மிக்க தொகுதி. சமூக அமைப்பிலும் அவருக்கு செல்வாக்கு உண்டு. இதனால் அவரை தோற்கடிப்பது சற்று கடினமான செயலாக பார்க்கப்பட்டது. இந்த சூழலில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் கைலாஷ் சவுத்திரயை தேர்ந்தெடுத்து அமித் ஷா களமிறக்கினார்.

 எம்எல்ஏவாக இருந்த அனுபவம் வாய்ந்த அவர் மனவேந்திர சிங்கை எதிர்த்து களம் கண்டார். தேர்தல் பிரச்சாரத்தில் அவரது வியூகம் வெற்றி கண்டது. மனவேந்திர சிங்கை 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கைலாஷ் சவுத்திர தோற்கடித்தார். இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் மட்டுமின்றி நிர்வாகிகளும் கூட பெரிய அளவில் கொண்டாடினர். இதையடுத்து கைலாஷ் சவுத்திரிக்கு அமைச்சர் பதவி வழங்கி, பிரதமர் மோடி கவுரவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close