[X] Close

''தீர்வை நோக்கிச் செல்ல பேச்சுவார்த்தையே ஒரே வழி'' - பிரதமர்களின் தொலைபேசி உரையாடலுக்கு மெஹபூபா வரவேற்பு


  • kamadenu
  • Posted: 26 May, 2019 20:07 pm
  • அ+ அ-

-பிடிஐ

பிரதமர் மோடியுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் பேசியதை மெஹபூபா முப்தி வரவேற்றுள்ளார்.

பாலகோட் விமானப்படைத் தாக்குதலுக்குப் பிறகு இரு நாட்டுப் பிரதமர்களும் தொலைபேசியில் பேசிக்கொள்வது இதுவே முதல்முறை.

பிரதமர் மோடியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் இன்று அழைத்துப் பேசியதாகவும் அப்போது மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

அப்போது பிரதமர் மோடி, ''அமைதிக்கான ஒத்துழைப்பை வளர்ப்பதற்கு நம்பிக்கையும் வன்முறையும் பயங்கரவாதமும் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்குவது அவசியம்'' என்று இம்ரான் கானிடம் வலியுறுத்தியதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் தனது கருத்தைப் பதிவிட்டுள்ள காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெஹபூபா, ''இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள நீண்டகாலப் பிரச்சினையின் தீர்வை நோக்கிச் செல்வதற்கு பேச்சுவார்த்தைதான் ஒரேவழி. பேச்சுவார்த்தைக்கான மதிப்பு மிகவும் பெரியது என்பதால் இம்முயற்சியை நான் வரவேற்கிறேன்'' என்று காஷ்மீர் பிரச்சினையைக் குறிப்பிட்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close