[X] Close

தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக முடிவு: ராஜினாமா கடிதம் கொடுத்தார் கமல்நாத் 


  • kamadenu
  • Posted: 25 May, 2019 20:51 pm
  • அ+ அ-

காங்கிரஸ் தோல்வியை தொடர்ந்து மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவெடுத்து அம்மாநில முதல்வர் கமல்நாத் கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.

17-வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகமோசமான தோல்வியைச் சந்தித்து 52 இடங்களில் மட்டுமே வென்றது. கடந்த 2014-ம் ஆண்டு இதேபோன்ற காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்து 44 இடங்களில்தான் வென்றது. இதனால், எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெறமுடியவில்லை.

அதேபோன்ற தோல்வியைத்தான் இந்த மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி  பெற்றுள்ளது.  52 இடங்களில் வென்றபோதிலும் இந்த முறையும் எதிர்க்கட்சி எனும் அந்தஸ்தை காங்கிரஸ் கட்சியால் பெற முடியாது.

அதுமட்டுமல்லாமல் நேரு குடும்பத்தினர் பாரம்பரியமாக போட்டியிட்டு வென்றுவரும் அமேதி தொகுதியிலும் இந்த முறை காங்கிரஸ் கட்சி வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டது.

மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க இன்று கூடிய காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாக காங்கிரஸ் மறுத்துள்ளது.

இந்தநிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அம்மாநில முதல்வராக இருந்து வரும் கமல்நாத், கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று மாநில தலைவர் பதவியில் இருந்து விலக முன் வந்து கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close