[X] Close

பாஜக நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி மீண்டும் தேர்வு: அத்வானி காலில் விழுந்து ஆசி


  • kamadenu
  • Posted: 25 May, 2019 18:34 pm
  • அ+ அ-

-Janarthanaperumal S_50242

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்.பி.க்களின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக நாடாளுமன்ற கட்சித் தலைவராக பிரதமர் மோடி முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. பாஜக மட்டும் தனித்து 303 இடங்களைப் பிடித்தது.

இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடை பெற்றது. இதில் 16-வது மக்களவையைக் கலைக்க குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதன் பிறகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த பிரதமர் மோடி, அமைச்சரவையின் பரிந் துரையை அளித்தார். மேலும் தனது அமைச்சரவையின் ராஜி னாமா கடிதத்தையும் அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட குடி யரசுத் தலைவர், புதிய அரசு பதவியேற்கும் வரை ஆட்சியில் நீடிக்க பிரதமரைக் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி யின் புதிய எம்.பி.க்களின் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. இதில் பாஜகவின் மக்களவைத் தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து. தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடந்தது.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்ற கட்சித் தலைவராக மோடியை அகாலிதள கட்சித் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் முன்மொழிந்தார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் வழி மொழிந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஏக மனதாக அவர் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக முறைப்படி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பிறகு அவர் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார்.

modi3.JPG 

வரும் 30-ம் தேதி அவர் மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். நாளை தனது சொந்த மாநிலமான குஜராத் செல்லும் பிரதமர் மோடி தனது தாயை சந்தித்து ஆசிபெற உள்ளார். மேலும், அம்மாநில பாஜக நிர்வாகிகளையும் சந்தித்து பேசவுள்ளார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close