[X] Close

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் மோடி Vs ராகுல் போட்டி மட்டுமே: ஆம் ஆத்மி


vs

  • kamadenu
  • Posted: 25 May, 2019 17:04 pm
  • அ+ அ-

-ஏஎன்ஐ

நடந்து முடிந்த 2019 மக்களவைத் தேர்தல் நரேந்திர மோடி - ராகுல் காந்தி இடையேயான போட்டியாக மட்டுமே அமைந்தது என்று ஆம் ஆத்மி கட்சியின் கோபால் ராய் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது:

மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினோம். டெல்லிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை மக்களிடம் ஏன் கொண்டு சேர்க்க இயலவில்லை என ஆலோசனை மேற்கொண்டோம். அதில் எங்களது முடிவு இதுவே. இந்த தேர்தல் நரேந்திர மோடிக்கு - ராகுல் காந்திக்கும் இடையேயான போட்டி என்றளவில் மட்டுமே இருந்தது. அதனாலேயே டெல்லி மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மியால் சோபிக்க இயலவில்லை" என்றார்.

மக்களவைத் தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 18% வாக்குகள் மட்டுமே பெற்ரது. பாஜக 56 சதவீத வாக்குகளையும் காங்கிரஸ் 22 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.

பாஜக 7 தொகுதிகளிலுமே வெற்றி பெற்றது. 2014-லும் டெல்லியில் பாஜக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்தத் தேர்தலில் கூடுதலாக 10% வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஆம் ஆத்மியின் மூன்று வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

கோபால் ராய் மேலும் கூறும்போது, "நாங்கள் மக்கள் தீர்ப்பை மதிக்கிரோம். எங்கள் வேட்பாளர்கள் கடுமையாகவே களப் பணி செய்தனர். வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். இருந்தாலும் ஆம் ஆத்மியால் வெற்றி பெற இயலவில்லை.

நாடாளுமன்றத்தில் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் மக்கள் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பார்கள்" என்றார்.

இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டும் தான் நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியுள்ளார். சங்ரூர் பகுதியைச் சேர்ந்த பகவந்த் சிங் மான் என்பவர் காங்கிரஸ் வேட்பாளர் கேவல் சிங் திலானை வென்றுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close