[X] Close

மேற்கு வங்கத்தில் டெபாசிட் வாங்கிய ஒரேயொரு இடதுசாரி வேட்பாளர்


  • kamadenu
  • Posted: 24 May, 2019 21:44 pm
  • அ+ அ-

இந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு புறம் அதிமுக ஒரேயொரு தொகுதியில் வென்று மற்றதில் மண்ணைக்கவ்வ, அடிமட்ட நிலைக்குச் சென்ற இன்னொரு கட்சி என்றால் அது மேற்கு வங்க இடதுசாரிக் கட்சிதான்.

 

இடதுசாரி வாக்குவங்கியெல்லாம் பாஜக பக்கம் சாய்ந்து விட்டதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி பாஜகவின் வெற்றி முகத்துக்குக் காரணம் கூறியது.

 

2019 தேர்தலில் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களை பிடித்தது. பா.ஜனதா 18 இடங்களையும், காங்கிரஸ் இரண்டு இடங்களையும் பிடித்தது. அங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் இடதுசாரிகள் ஒரு தொகுதிகளில் கூட வெற்றிப்பெறவில்லை. மாநிலத்தில் இடதுசாரிகளின் வாக்கு வங்கி 34 சதவீதத்தில் இருந்து வெறும் 6.28 சதவீதமாக குறைந்துள்ளது. போட்டி திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும்தான் என்றாகிவிட்டது. 

 

2011-ம் ஆண்டு 34 வருட இடதுசாரிகள் ஆட்சிக்கோட்டையை  மம்தா பானர்ஜி தகர்த்தார். இதன்பின்னர் இடதுசாரிகளுக்கு இறங்கு முகம்தான். இப்போது இவர்கள் இழந்த வாக்கு வங்கி பாஜகவை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

 

இடதுசாரிகள் தரப்பில் 42 தொகுதிகளில் வேட்பாளர் இறக்கப்பட்டாலும் ஒரேஒரு வேட்பாளர் மட்டுமே டெபாசிட் பெற்றுள்ளார். மற்றவர்கள் யாரும் டெபாசிட் பெறவில்லை. ஒருதொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கட்டும் டெபாசிட் தொகையான ரூ. 25 ஆயிரத்தை திரும்ப பெற வேண்டும் என்றால் 16 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.

 

அந்த வகையில் மேற்கு வங்காளத்தில் ஜாதாவ்பூரில் போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளர் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யாவை தவிர்த்து வேறு எந்தஒரு இடதுசாரி வேட்பாளரும் 16 சதவீத வாக்குகளை பெறவில்லை. ரஞ்சன் பட்டாச்சார்யா மட்டும் டெபாசிட்டை பெற்றுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close