[X] Close

ராகுல் ராஜினாமா செய்யாதது ஆச்சர்யமளிக்கிறது: ராமச்சந்திர குஹா


  • kamadenu
  • Posted: 24 May, 2019 17:04 pm
  • அ+ அ-

காங்கிரஸ் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி இன்னும் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யாதது ஆச்சர்யமளிப்பதாகக் கூறியிருக்கிறார் வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா.

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 348 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக மட்டுமே 303 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 52 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 90 தொகுதிகள் கிடைத்துள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் தோல்வி குறித்து ராமச்சந்திர குஹா தனது ட்விட்டர் பக்கத்தில், "காங்கிரஸ் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி இன்னும் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யாதது ஆச்சர்யமளிக்கிறது.

சுயமரியாதையும் அரசியல் நடைமுறையும் ராகுலின் ராஜினாமாவைக் கோருகிறது. காங்கிரஸ் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேவையை உணர்த்துகிறது.

ஆனால், காங்கிரஸுக்கு சுயமரியாதையும் இல்லை அரசியல் நடைமுறை தெளிவும் இல்லை என நினைக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இத்தனைக்கும் ராமச்சந்திர குஹா, ஜவஹர்லால் நேரு மீது மிகுந்த பற்று கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, கருத்துக் கணிப்பு முடிவு வெளியான போதே  ஸ்வராஜ் இந்தியா கட்சித்தலைவர் யோகந்திர யாதவ் மிகவும் காத்திரமான ட்வீட்டைப் பதிவு செய்திருந்தார்.

அதில், அவர் "காங்கிரஸ் அழிய வேண்டும். இந்தத் தேர்தலில் பாஜகவை தடுத்து நிறுத்துவதன் மூலம் இந்தியாவை காக்க வேண்டும் என்ற இலக்கை காங்கிரஸால் எட்ட இயலாவிட்டால், அக்கட்சி அழிவதே நல்லது.

இந்திய வரலாற்றில் காங்கிரஸ் நல்லது எதையுமே செய்யவில்லை. மாற்று சக்தியை உருவாக்குவதற்கு பெரிய தடைக்கல்லாக இருப்பது காங்கிரஸ் தான்" எனக் குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது, மிகப்பெரிய வரலாற்று ஆறிஞர் ராமச்சந்திர குஹா காங்கிரஸையும் ராகுலையும் வசை பாடியுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close