[X] Close

தேர்தல் வெற்றி: ஸ்டாலினுக்கு மோடி வாழ்த்து


  • kamadenu
  • Posted: 24 May, 2019 13:53 pm
  • அ+ அ-

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடி திமுக தலைவரும், தமிழக எதிர்க் கட்சித் தவைருமான ஸ்டாலினுக்கு மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் 280க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதனைத் தொட்ரந்து திமுக தலைவர் ஸ்டாலின் மோடிக்கு வாழ்த்து தெரிவிந்திருந்தார்.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் 38 இடங்கள் வென்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் “ உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஸ்டாலின்.  தமிழக மக்களிடமிருந்து உங்களுக்கும், உங்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றிக்கு வாழ்த்த கூறுவதற்கான வாய்ப்பாக இதனை எடுத்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close