[X] Close

3-வது பெரியக்கட்சி திமுக: தமிழகத்துக்கு இந்தமுறையும் அங்கீகாரம்


3

  • kamadenu
  • Posted: 24 May, 2019 11:28 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் தனிப்பட்டமுறையில் இருபெரும் தேசியக் கட்சிளான பாஜக, காங்கிரஸூக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தை திமுக பெற்றுள்ளது. கடந்தமுறை அதிமுக பெற்ற அந்தஸ்தை திமுக இந்தமுறை பெற்றுள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதா இல்லாத நிலையில் இந்தத் தேர்தலை சந்தித்தது. கடந்த2014-ம் ஆண்டு நடந்த மக்களவைபொதுத்தேர்தலில், எந்த கட்சியுடனும் கூட்டணியில்லை என்று அறிவித்த பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமிழகத்தில் 39 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்.

இதில் கன்னியாகுமரி, தருமபுரி தவிர மற்ற 37 இடங்களையும் அதிமுக கைப்பற்றியது. இதன் மூலம் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்தபடியாக மக்களவையில் அதிமுக 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்தது. நாடாளுமன்ற வளாகத்தில் தனி அலுவலகம் பெறும் அளவுக்கு முன்னேறியது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியடைந்துள்ளது. அக்கட்சி ஓரிடத்தில் மட்டுமே வென்றுள்ளது. அதேசமயம் திமுக இந்தமுறை 23 இடங்களில் வென்றுள்ளது. இந்த மக்களவைத் தேர்தலில் தனிப்பட்ட கட்சியாக பாஜக 303 இடங்களில் வென்றி பெறும் நிலை உள்ளது.

முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் 52 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. அந்த கட்சி 2-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மாநில கட்சியான திமுக 23 இடங்களில் வெற்றி பெற்று 3-வது பெரியக் கட்சி என்ற பெருமையை பெற்றுள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமல் காங்கிரஸ் 22 இடங்களில் வென்றுள்ளது. இதுபோலவே ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸூம் 22 இடங்களில் பிடித்துள்ளது.

இதன் மூலம் கடந்த தேர்தலைபோல இருபெரும் தேசியக்கட்சிகளுக்கு பிறகு அதிக இடங்களில் வென்ற 3-வது கட்சி என்ற பெருமை தமிழகத்துக்கே கிடைத்துள்ளது. எனினும் கடந்த தேர்தலில் அதிமுக 37 இடங்களில் வென்றது. ஆனால் இந்தமுறை திமுக 23 வென்ற இடங்கள் 23 என்பது குறிப்பித்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close