[X] Close

ஜின்னா படத்தை பாக்., அனுப்புவதுதான் எனது முதல் வேலை: அலிகார் பாஜக எம்.பி. 


  • kamadenu
  • Posted: 24 May, 2019 11:09 am
  • அ+ அ-

-ஏஎன்ஐ

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் முகமது அலி ஜின்னாவின் புகைப்படத்தை பாகிஸ்தானுக்கே அனுப்புவதுதான் தனது முதல் கடமை எனக் கூறுகிறார் உத்தரப் பிரதேச மாநில அலிகார் தொகுதி எம்.பி. சதீஷ் குமார் கவுதம்.

சதீஷ் குமார் இரண்டாவது முறையாக எம்.பி.யாக இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் வெற்றிக்குப் பின்னர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்  "எம்.பி.யாக எனது பணியில் நான் முதன்மையாக பட்டியலிட்டிருப்பது அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஓர் அறையில் வைக்கப்பட்டுள்ள முகமது அலி ஜின்னா படத்தை பாகிஸ்தானுக்கே மீண்டும் அனுப்புவது.

இதுதவிர தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்களின் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய போராடுவேன். ஏனெனில் பாஜகவின் கொள்கையே அனைவருக்குமான வளர்ச்சி; அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதே" என்றார்.

சதீஷ் குமார் கவுதம் 6,56,215 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் 4,26,954 வாக்குகள் பெற்றார். 1991 முதல் 2001 வரை பாஜக அலிகர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 2004-ல் வெற்றி பெற்றது. 2009-ல் பகுஜன் சமாஜிடம் காங்கிரஸ் இழந்தது. 2014-ல் சதீஷ் குமார் கவுதம் அலிகார் தொகுதியை பாஜக சார்பில் வென்றார். 2019-ல் அவர் தனது தொகுதியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close