[X] Close

மோடி மீதான அதீத எதிர்மறை பிரச்சாரமே காங்., மீது பூமாராங் போல் திரும்பிவிட்டது: லால் பகதூர் சாஸ்திரியின் மகன் கருத்து


  • kamadenu
  • Posted: 24 May, 2019 10:43 am
  • அ+ அ-

-ஏஎன்ஐ

பிரதமர் மோடி மீதான எதிர்மறை பிரச்சாரம் பூமாராங் போல் காங்கிரஸ் மீதே திரும்பிவிட்டதாக முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "பிரதமர் மோடிக்கு எதிராக அளவுக்கு அதிகமான எதிர்மறை பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.

சவுகிதார் சோர் ஹை அதாவது காவலாளியே திருடன் என்ற சொல்லாடலையும் மக்கள் விரும்பவில்லை. இதனை ராகுல் காந்தி அடிக்கடி பயன்படுத்தியது பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவில்லை.

காங்கிரஸ் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசத் தவறிவிட்டது. காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் மக்களின் எண்ண ஓட்டத்தை உணர தவறிவிட்டனர்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நல்ல வாக்கு வங்கி கிடைத்திருந்தால்கூட தேர்தல் முடிவு இன்னும் சிற்ப்பாக இருந்திருக்கும்" எனக் கூறியுள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடியின் வெற்றிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார்.

தேர்தல் முடிவை மக்கள் தீர்ப்பு என்று ராகுல் அழைத்திருந்தார். அவர் பேசியபோது, "நான் தேர்தல் பிரச்சாரத்தின்போதே சொல்லியிருந்தேன் மக்களே முதலாளி என்று. மக்கள் தீர்ப்பே இறுதி என்றும் சொல்லியிருந்தேன்.

இன்று மக்கள் தங்கள் முடிவை தெரிவித்துள்ளனர். நான் பிரதமர் மோடியையும் பாஜகவையும் வாழ்த்துகிறேன்" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவு:

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 348 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக மட்டுமே 303 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 52 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 90 தொகுதிகள் கிடைத்துள்ளன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close