[X] Close

ராகுலோடு போட்டியிட்டு முன்னிலை: வைரலாகும் ஸ்மிருதி இரானி ட்வீட்


  • kamadenu
  • Posted: 23 May, 2019 19:52 pm
  • அ+ அ-

அமேதி தொகுதியில் ராகுல் காந்தியோடு போட்டியிட்டு முன்னிலை பெற்றிருப்பதற்கு ஸ்மிருத் இரானி வெளியிட்ட ட்வீட் பெரும் வைரலாகி வருகிறது.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 23) காலை 8 மணிக்குத் தொடங்கியது. இந்தியளவில் 300-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்று பாஜக 2-வது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதில் இந்தியளவில் அமேதி தொகுதியின் விவரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2004-ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியா அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தான் வெற்றி பெற்று வந்தார். ஆனால், இம்முறை இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட ஸ்மிருதி இரானி 40000 வாக்குகளுக்கு அதிகமாக முன்னிலையில் இருக்கிறார்.

இந்த முன்னிலை தொடர்பாக ஸ்மிருதி இரானி தனது ட்விட்டர் பக்கத்தில் “வானத்தில் கோடு போட முடியாது என்று யார் சொன்னது...” என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டை சுமார் 21,000-க்கும் அதிகமானோர் ரீ-ட்வீட் செய்தும், 85,000-க்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இதனால் இந்த ட்வீட், ட்விட்டர் பக்கத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

முன்னதாக, 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இதே அமேதி தொகுதியில் ராகுல் காந்தியிடம் ஸ்மிருதி இரானி தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

ஸ்மிருதி இரானி ட்வீட் 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close