ஜூலை 16ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு... கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!


கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளில் ஜூலை 16-ம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை, மிகக்கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், உத்தர கன்னடா, தட்சிண கன்னடா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் இன்று (ஜூலை 11) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதேபோல், பெல்காம் மற்றும் தார்வாட் மாவட்டங்களில் இடி மற்றும் சூறைக்காற்றுடன் (மணிக்கு 30-40 கிமீ வேகத்தில்) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வட உள் கர்நாடகாவின் பாகல்கோட், கடக், ஹாவேரி, கொப்பல், ராய்ச்சூர், விஜயப்பூர், பிதார், கலபுர்கி, யாத்கிரி ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் காற்றின் வேகத்துடன் (மணிக்கு 30-40 கிமீ) லேசானது முதல் மிதமான மழை, இடியுடன் கூடிய மழை பெய்யும். தெற்கு உள் கர்நாடக மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை ( ஜூலை 12) தட்சிண கன்னடா, உடுப்பி மற்றும் உத்தர கன்னடா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பிதார், கலபுர்கி, பெல்காம் மாவட்டங்களில் கனமழை மற்றும் நிலையான காற்றின் வேகம் (மணிக்கு 30-40 கிமீ) பெய்யக்கூடும். ஷிமோகா, சிக்கமகளூரு, ஹாசன், குடகு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல், ஜூலை 16-ம் தேதி வரை வட உள்பகுதியில் உள்ள பாகல்கோட், யாத்கிரி, தார்வாட், கடக், ஹாவேரி, கொப்பல், ராய்ச்சூர், விஜயப்பூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் காற்றின் வேகம் (மணிக்கு 30-40 கி.மீ.) வீசக்கூடும் என்றும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு உள் கர்நாடகாவின் பெல்லாரி, பெங்களூரு மாநகர், பெங்களூரு புறநகர், சாமராஜநகர், சிக்கபள்ளாப்பூர், சித்ரதுர்கா, தாவண்கெரே, கோலார், மாண்டியா, மைசூர், ராமநகரா, தும்கூர், விஜயநகர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.