[X] Close

மோடி தலைமையிலான புதிய அரசு வரும் 26-ம் தேதி பதவியேற்பு


26

  • kamadenu
  • Posted: 23 May, 2019 17:17 pm
  • அ+ அ-

17-வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாஜக தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது

பிரதமர் மோடி தலைமையில் புதிதாக அமையும் அரசு வரும் 26-ம் தேதி பதவி ஏற்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

542 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல்  பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடந்து வருகிறது. இன்னும் உறுதியான முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவிக்காத நிலையில், முன்னிலை நிலவரங்கள் அடிப்படையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப் பெரும்பான்மையுடன் நகர்ந்து வருகிறது.

அதேசமயம், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 93 இடங்கள் முன்னிலை பெற்று வருகிறது.

இந்நிலையில், வாரணாசியில் பிரதமர் மோடி 2 லட்சம் வாக்குகள் முன்னிலையிலும், காந்தி நகரில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா 5 லட்சம் வாக்குகள் முன்னிலையிலும் உள்ளனர்.

பாஜக மிகப்பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்துவரும் நிலையில் நாளை பாஜகவின் ஆட்சி மன்றக் குழுக்கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.  பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இந்நிலையில், பாஜக தலைமையிலான வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில், நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் இந்த வெற்றியை இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்த தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு தொண்டர்கள் மலர்களைத் தூவி உற்சாகமான வரவேற்பு அளித்தார்கள். கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு முக்கியத் தலைவர்கள் பலர் வரத் தொடங்கியுள்ளனர்.

இன்று இரவுக்குள் தேர்தல் ஆணையம் உறுதியான தேர்தல் முடிவுகளை அறிவித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பின் புதிய அரசு பிரதமர் மோடி தலைமையில் வரும் 26-ம் தேதி பதவி ஏற்கும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close