[X] Close

எனது தேசம் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது; மோடி, அமித் ஷாவுக்கு கே.அத்வானி வாழ்த்து


  • kamadenu
  • Posted: 23 May, 2019 16:26 pm
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் பாஜக எப்போதும் இல்லாத வெற்றியைப் பெற்றுக்கொடுத்த நரேந்திர மோடி, அமித் ஷாவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.

542 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிந்து, இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் தொடக்கம் முதலே பாஜக தொடர்ந்து முன்னிலையுடன் இருந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெருவாரியான தொகுதிகளைக் கைப்பற்றி வரும் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் 2-வது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கிறது.

பாஜகவின் வெற்றிக்கு மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறுகையில், "மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்த நரேந்திர மோடிக்கும், அமித் ஷாவுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். பாஜகவின் செய்தியை ஒவ்வொரு வாக்காளருக்கும் கொண்டு சேர்த்து வெற்றிக்கு உழைத்த பாஜக தலைவர், அர்ப்பணிப்பான தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

இந்தியா போன்ற மிகப்பெரிய, பல்வேறு விதமான நம்பிக்கைகள் கொண்ட மக்கள் இருக்கும் தேசத்தில் இந்த வெற்றி மிகச்சிறந்த உணர்வை வெளிப்படுத்துகிறது. தேர்தலை மிகவெற்றிகரமாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்துக்கு எனது வாழ்த்துகள்.  ஒளிமயமாயன எதிர்காலம் கொண்ட எனது தேசம் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close