[X] Close

அமித் ஷாவைப் போன்ற ஒருவரை காங்கிரஸ் பெறுவதற்கான நேரம் இது: மெஹபூபா முப்தி


  • kamadenu
  • Posted: 23 May, 2019 15:34 pm
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றிருக்கிற பாஜகவுக்கு மெஹபூபா முப்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையில் மக்களவைத் தேர்தலைச் சந்தித்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்து மீண்டும் 2-வது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கிறது.

290க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்று வருவதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 51 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்தத் தேர்தலில் அனந்த் நாக் தொகுதியில் தோல்வி அடைந்துள்ள ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள பாஜகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக வெற்றி குறித்து மெஹபூபா முப்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ''வரலாற்று வெற்றிக்கு  நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்.  இன்று  பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய நாள். அமித் ஷாவைப் போன்ற ஒருவரை காங்கிரஸ் பெறுவதற்கான நேரம் இது'' என்று பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close