[X] Close

கேசிஆர் நம்பிக்கை தகர்ந்தது; தெலங்கானாவில் கவிதா பின்னடைவு: பாஜக, காங். கட்சிகளுக்கு முன்னிலை


  • kamadenu
  • Posted: 23 May, 2019 15:17 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவின் மூன்றாம் அணி மீதான நம்பிக்கை தகர்ந்தது.

மாநிலத்தில் உள்ள 17 இடங்களையும் கைப்பற்றுவோம் என்று சந்திரசேகர ராவ் கூறியதும் பலிக்காமல் போனது. சந்திரசேகர ராவின் மகளும், நிசாமாபாத்தின் எம்.பி.யுமான கவிதா பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

அதேசமயம், கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ், பாஜகவுக்கு எந்த இடமும் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் இரு கட்சிகளும் தலா 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

தெலங்கானா முதல்வராக இருந்த கே.சி.ஆர். தனது ஆட்சிக்காலம் முடிய ஒரு ஆண்டு இருக்கும் முன்பே இந்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தலைச் சந்தித்து வெற்றுபெற்று 2-வது முறையாக முதல்வரானார்.

அதிகப்படியான பெருமான்மையுடன் ஆட்சியைப் பிடித்ததால், மக்களவைத் தேர்தலிலும் டிஆர்எஸ் கட்சி அனைத்து இடங்களையும் கைப்பற்றும் என்று சந்திரசேகர ராவ் நம்பினார்.

இதன்படி மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்படும் முன்பே 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சந்திரசேகர ராவ் அறிவித்தார். தனது மகளும் எம்.பி.யுமான கவிதாவுக்கு நிசாமாபாத் தொகுதியில் வாய்ப்பளித்தார்.

kaniha.png 

அதுமட்டுமல்லாமல் தனது தலைமையில் மூன்றாவது அணி அமைக்கும் நோக்கில் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்தார் சந்திரசேகர ராவ். இதனால் சந்திரசேகர ராவ் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. இதில் எதிர்பாராத வகையில், டிஆர்எஸ் கட்சி 8 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தலா 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

சந்திரசேகர ராவ் மகள் கவிதா நிசாமாபாத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அங்கு விவசாயிகள் நூற்றுக்கணக்கில் கவிதாவுக்குப் போட்டியாக களமிறங்கியதால், கவிதா பாஜக வேட்பாளர் அரவிந்தைக் காட்டிலும் 37 ஆயிரம் வாக்குகள் பின்னடைவைச் சந்தித்துள்ளார். மேலும் மூத்த தலைவர் வினோத் குமார் கரீம் நகரில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் கிசான் ரெட்டி செகந்தராபாத் தொகுதியில் 36 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார். மேலும் கரீம் நகர், அடிலாபாத், ஆகியவற்றிலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

நல்கொண்டாவில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் உத்தம் குமார் ரெட்டி முன்னிலை பெற்றுள்ளார். ஹைதராபாத்தில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் ஒவைசி 1.5 லட்சம் வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close