[X] Close

மேற்கு வங்கத்தில் எதிர்காலத்தில் பாஜக ஆட்சி அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை: திரிணமூல் கட்சியின்  சந்தன் மித்ரா அதிர்ச்சிக் கருத்து


  • kamadenu
  • Posted: 23 May, 2019 14:45 pm
  • அ+ அ-

நீண்ட கால இடதுசாரி கோட்டையாக இருந்த மேற்கு வங்கம் பிறகு திரிணமூல் கோட்டையாக மாறியது, 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக எதிர்பாராத விதமாக 18 இடங்களில் முன்னிலை வகிப்பதையடுத்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியே ஆச்சரியமடைந்துள்ளது.

 

அக்கட்சியின் சந்தன் மித்ரா என்பவர் கடந்த ஆண்டு பாஜகவிலிருந்து விலகி திரிணமூல் கட்சியில் இணைந்தார். அவரே பாஜகவின் முன்னேற்றத்தைக் கண்டு தான் ஆச்சரியமடைந்துள்ளதாக தெரிவித்தார், அதோடு மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜகவுக்கு வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது என்று திரிணமூல் கட்சியில் இருந்து கொண்டு அவர் கூறியுள்ளார்.

 

தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் கூறும்போது, “கண்டிப்பாக இது ஆச்சரியமே. ஒராண்டுக்கு முன்னதாகக் கூட பாஜக இங்கு இல்லை என்றே கூற வேண்டும். ஆனால் கடந்த 2 தேர்தல்களில் அவர்களது வளர்ச்சி ஆழமாகியுள்ளது. எதிர்காலத்தில் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேற்கு வங்கத்தில் பாஜக வளர்ந்து விட்டது” என்று பேசியுள்ளார்.

 

இவரது பேச்சை திரிணமூல் எப்படி எடுத்துக் கொள்ளும் என்பது தெரியவில்லை.  ஆனால் இது தன் சொந்தக் கருத்து எனவும் கட்சிக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் ஜகா வாங்கினார் சந்தன் மித்ரா.

 

இடது சாரிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளனர், இவர்களது வாக்கு வங்கியில் பெரும்பான்மை திரிணமூலுக்குச் செல்லாமல் பாஜக பக்கம் சென்றுள்ளதாக தேர்தல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

அதுவும் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் பாஜக நன்றாக செயல்பட்டிருக்கிறது. அதே போல் எல்லைப்பகுதிகளிலும் பாஜக பக்கம் சாய்வு இருக்கிறது. அதாவது மத ரீதியான பிரச்சாரத்தினால் கணிசமான வாக்குகளை பாஜக இந்தப் பகுதிகளில் பெற்றுள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்தக் கணிப்பாளர்கள் கூறுகின்றனர்.

 

2021-ல் பாஜக இங்கு கடுமையான சவால்களை திரிணமூல் காங்கிரஸுக்கு அளிக்கும் என்று இப்போது அங்கு எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close