[X] Close

மக்களவைத் தேர்தல் வெற்றி; பாஜக ஆட்சிமன்றக் குழு நாளை கூடுகிறது: பிரதமர் மோடி உரையாற்றுகிறார்


  • kamadenu
  • Posted: 23 May, 2019 13:43 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியை நோக்கி நகர்ந்து மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்ற உள்ள நிலையில் அக்கட்சியின் மன்றக்குழுக் கூட்டம் டெல்லியில் நாளை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார்.

542 மக்களவைத் தொகுதிகளுக்கம் 7 கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்து, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் இருந்தே பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தது. தென் மாநிலங்களில் கர்நாடகா தவிர்த்து மற்ற தமிழகம், கேரளா, தெலங்கானா, ஆந்திராவில்  பாஜகவுக்கு அதிகமான இடங்கள் கிடைக்கவில்லை.

ஆனால், வட மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி 336 இடங்கள் முன்னிலையுடன் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 60 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றியுடன்  அசுரபலத்துடன் 2-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க இருக்கிறது. இறுதியான முடிவுகள் இன்று இரவுக்குள் அறிவிக்கப்படக்கூடும். இந்த சூழலில் பாஜகவின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், மத்திய  அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில்  பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இந்தக் கூட்டத்தில் பாஜக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close