[X] Close

மேற்குவங்கத்தில் பாஜக அபாரம்: மம்தாவுக்கு கடும் சவால்?


  • kamadenu
  • Posted: 23 May, 2019 13:14 pm
  • அ+ அ-

மேற்குவங்கத்தில் பாஜக இதுவரை இல்லாத அளவு திரிணாமுல் காங்கிரஸூக்கு அடுத்த இடத்தை கைபற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 34 தொகுதிகளை கைபற்றி மாபெரும் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான இடதுசாரி கூட்டணி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2009- மக்களவைத் தேர்தலில் அந்த கூட்டணி 13 இடங்களை கைபற்றியது.

2009- மக்களவைத் தேர்தலில் 15 இடங்களி்ல் வெற்றி பெற்ற நிலையில் திரிணாமுல் 34 இடங்களை கைபற்றியது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 39 சதவீத வாக்குகளையும், இடதுசாரி கூட்டணி 30 சதவீத வாக்குகளையும் பெற்றன.

2014-ம் ஆண்டு  தேர்தலில் 17 சதவீத வாக்குகளை பெற்ற பாஜக 2 இடங்களில் வென்றது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் மேற்குவங்கத்தில் பாஜக கணிசமான வளர்ச்சி பெற்றுள்ளது. அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலி இடதுசாரிக் கூட்டணியை மூன்றாம் இடத்துக்கு தள்ளி பாஜக 2-ம் இடம் பெற்றது. மக்களவைத் தேர்தலில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. இதனால் பிரதமர் மோடியும், மம்தா பானர்ஜியும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்தனர்.

இடதுசாரிக் கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள், நிர்வாகிகளை பொறுத்தவரையில் தங்களுக்கு வலிமை இல்லாத தொகுதிகளில் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு கோரியதாக கூறப்படுகிறது. இதனை இடதுசாரி கட்சிகளின் மாநில நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், கீழ்மட்ட அளவில் இடதுசாரி கட்சி தொண்டர்கள் மத்தியில் பாஜக ஆதரவு போக்கு காணப்பட்டதாக தகவல் வெளியாகியது.

அதுமட்டுமல்லாமல் வழக்கமாக இடதுசாரிக் கட்சிகளுக்கு வாக்களிக்கும் நடுத்தர வகுப்பு மக்கள் இந்த முறை பெருமளவு பாஜக மீது ஈர்ப்பு காட்டியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸூக்கு கடும் போட்டியாக பாஜக உருவெடுத்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்தபோதிலும், பாஜக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

 

மொத்த தொகுதி: 42

திரிணாமுல் காங்கிரஸ்: 23

பாஜக 18

காங்கிரஸ் : 1

இடதுசாரி: 0

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close