[X] Close

கேரளாவில் 20 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை: 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி முன்னிலை


20-35

  • kamadenu
  • Posted: 23 May, 2019 10:04 am
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில், 18 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது.  இடது சாரிகள் 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான இடது ஐக்கிய முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் இடது ஜனநாயக முன்னணியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.

இதில், தொடக்கத்தில் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் கும்மணம் ராஜசேகர் முன்னிலை பெற்றார், காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் பின்னடைவைச் சந்தித்தார். ஆனால், நேரம் செல்லச்செல்ல, காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் முன்னிலைபெற்று, 1000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.

வயநாட்டில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 35 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். இடதுசாரிகள் மாவேலிக்கரை, கண்ணூர் தொகுதியில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளனர்.

கர்நாடகா

கர்நாடகவில் குல்பர்கா தொகுதியில் இருந்து போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பின்னடைந்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா முன்னிலை பெற்றுள்ளார்.

ரேபரேலி தொகுதி

உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்று வருகிறார்.

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 11 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close