[X] Close

ஸ்மிருதி இரானி முன்னிலை: பிரகாஷ் ராஜ் பின்னடைவு


  • kamadenu
  • Posted: 23 May, 2019 09:47 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில், பெங்களூரு மத்தியத் தொகுதியில் போட்டியிட்ட  பிரகாஷ் ராஜ், முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

542 தொகுதிகளுக்கான தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடகவின் பெங்களூரு மத்தியத் தொகுதி நட்சத்திர வேட்பாளரான நடிகர் பிரகாஷ் ராஜ்,  முதல்கட்ட வாக்கு எண்ணிக்கையில் பின்டைவைச் சந்தித்துள்ளார்.

பிரகாஷ் ராஜுக்கு எதிராகக் களம்கண்ட பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, முன்னிலை பெற்று வருகிறார்.

ராகுல் காந்தி போட்டியிட்ட கேரளாவின் வயநாடு தொகுதியில், அவர் 10 ஆயிரம் வாக்குகளில் முன்னிலை பெற்றுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close