[X] Close

2019 தேர்தல் முடிவுகள்: கள நிலவரம்


2019

  • kamadenu
  • Posted: 23 May, 2019 07:54 am
  • அ+ அ-

-இணையதள செய்திப் பிரிவு

17-வது மக்களவைத் தேர்தல் நடந்து அதன் வாக்குகள் இந்தியா முழுவதும் இன்று (வியாழக்கிழமை) எண்ணப்படுகிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.

தமிழகத்தில் வேலூர் தொகுதி தவிர 38 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

அது குறித்த முழு நிலவரம்:

 

7.55 AM: கரூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக தலைமை முகவர் காளியப்பனுக்கு அனுமதி மறுப்பு

7.40 AM: கோவையில் வாக்கு இயந்திர பாதுகாப்பு அறை திறக்கப்படுகிறது!

தமிழகத்தில் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலின் முடிவுகளால் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அதுகுறித்து திமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். விரிவான செய்திக்கு: சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகளால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழுமா?- திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

இந்திய மக்களவைத் தேர்தலின் முடிவுகள் இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், கடந்துவந்த தேர்தல்களின் சுவடுகளில் பயணிப்பது, வரவிருக்கும் தீர்ப்பை நாம் புரிந்துகொள்ளக் கூடுதல் உதவியாக இருக்கும். இனி சுவடுகளுக்குள்... முழு செய்திக்கு: 2019 மக்கள் தீர்ப்புக்குள் நுழையும் முன்...

தமிழகத்தின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. இதில், குறைந்தபட்சம் எட்டு தொகுதிகள் கிடைக்காவிட்டால் ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க அதிமுக அரசு தயாராக உள்ளதாக டெல்லியில் தகவல்கள் கசிந்துள்ளன. முழு செய்திக்கு: எண்ணிக்கை கிடைக்காவிட்டால் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க அதிமுக திட்டம்?

மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகும் நிலையில் கர்நாடகாவில் குமாரசாமி அரசு தப்பிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான விவாதம் இங்கு அனல் பறக்கிறது. விரிவான செய்திக்கு: கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி அரசு தப்பிக்குமா?- தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்கப்படுவதால் முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் என்று தேர் தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழு விவரம் அறிய: வன்முறைச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க பதற்றமான பகுதிகளில் போலீஸார் குவிப்பு; காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்: மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பது 5 மணி நேரம் தாமதமாகும்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குறை சொல்லாமல் தேர்தல் தோல்வியை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று எதிர்க்கட்சிகளுக்கு பாஜக அறிவுரை கூறியுள்ளது. விரிவான செய்திக்கு: தோல்வியை ஏற்றுக் கொள்ளுங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு பாஜக அறிவுரை

பாஜகவை முந்திக் கொண்டு மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து மாற்று அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கூட்டணி, நவீன் பட்நாயக், சந்திரசேகர் ராவ், ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. எனினும் ஜெகன் மோகன் ரெட்டி பிடிக்கொடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. முழு செய்திக்கு: பாஜகவுடன் சேரவிடாமல் 3 பேரை தடுக்க காங்கிரஸ் அணி புதிய வியூகம்: சரத் பவாரை சந்திக்க மறுத்த ஜெகன் மோகன் ரெட்டி?

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ள நிலையில் காங்கிரஸ் தொண்டர்கள் அச்சப்பட வேண்டாம் என ராகுல் காந்தி ட்விட்டர் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார். முழு செய்திக்கு: அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது; விழிப்புடன் இருங்கள்: காங்., தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்

மூழ்கும் கப்பலில் இருக்கைகளை எங்கே வைத்தால்தான் என்ன? என பாஜகவை கிண்டலடித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர். முழு செய்திக்கு: மூழ்கும் கப்பலில் இருக்கைகளை எங்கே வைத்தால்தான் என்ன?- பாஜகவை கிண்டலடித்த சசி தரூர்

குரு, ராகு, சனி ஆகிய மூன்று கிரகங்கள் அதிகாரம் பெற்று சஞ்சரிக்கும் காலத்தில் நடந்துள்ள தேர்தலின் முடிவுகள், தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளுக்கு மாறாக இருக்கும் என்று வாரணாசி ஜோதிடர்கள் தெரிவித்துள்ளார்கள். விரிவான செய்திக்கு: தேர்தல் முடிவு குறித்து வாரணாசி ஜோதிடர்கள் புதிய கணிப்பு: யாருக்கு சாதகம்?

மத்திய அரசில் பங்கேற்பது குறித்து வாக்கு எண்ணிக்கை முடிவுக்குப்பின் நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். முழு செய்திக்கு: மத்திய அரசில் அதிமுக பங்கேற்குமா?- கட்சி நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுப்பதாக ஓபிஎஸ் தகவல்

ராஷ்ட்ரீய ஜனதா தல தலைவரும் பிஹார் முன்னாள் முதல்வருமான லாலுபிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தனது சமூகவலைதளத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து மாநில தேர்தல் ஆணையத்தை விளாசியிருக்கிறார். முழு செய்திக்கு: வாக்குப் பதிவு இயந்திரங்களை சுமக்க குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதா?- லாலு மகன் கண்டனம்

வாரிசு அரசியலின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாததால் எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி,  ஜனநாயகத்தை இழிவுபடுத்துகின்றன என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி குற்றம் சாட்டியுள்ளார். விரிவான செய்திக்கு: வாரிசு அரசியலின் தோல்வியை ஏற்க முடியாமல் எதிர்க்கட்சிகள் ஜனநாயகத்தை இழிவுபடுத்துகின்றன: பாஜக குற்றச்சாட்டு

கர்நாடக முதல்வராக குமாரசாமி வெள்ளிக்கிழமை காலை வரை தான் பதவியில் இருப்பார் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். முழுமையான செய்திக்கு: குமாரசாமி இரவு தூங்கமாட்டார்; வெள்ளிக்கிழமைக்குப் பிறகு பதவியில் இருக்க முடியாது: சதானந்த கவுடா

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மோசடியாகும் ஆகவே அடுத்த 24 மணிநேரம் முக முக்கியமானது கட்சித் தொண்டர்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் செயல்பட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஒரு மோசடி: ராகுல் காந்தி தாக்கு

தேமுதிக மத்திய அமைச்சரவையில் இடம்பெறுமா என்ற கேள்விக்கு எல்.கே.சுதீஷ் பதிலளித்துள்ளார். விரிவான செய்திக்கு: தேமுதிக மத்திய அமைச்சரவையில் இடம்பெறுமா?- எல்.கே.சுதீஷ் பதில்

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையின்படி, வாக்கு எந்திரத்தையும், ஒப்புகை சீட்டு எந்திரத்தில் உள்ள சிலிப்புகளையும் ஒப்பிட்டு சரிபார்க்கும் முறை தொடக்கத்திலேயே செய்ய முடியாது, கடைசிக் கட்டத்தில் செய்யவே தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. விரிவான செய்திக்கு: தொடக்கத்தில் இல்லை கடைசியில்தான்: ஒப்புகை சீட்டை ஒப்பிட்டு பார்க்கும் முறையில் தேர்தல் ஆணையம் தகவல்

வாக்கு எண்ணிக்கையின்போது கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்று வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். விரிவான செய்திக்கு: வாக்கு எண்ணிக்கையின்போது கவனமுடன் இருக்க வேண்டும்: அதிமுக முகவர்களுக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் அறிவுரை 

திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ, சட்டப்பிரிவு செயலாளர் ஆர்.கிரிராஜன் உள்ளிட்டோர் தலைமைச் செயலகத்தில் தலை மைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை நேற்று சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். விரிவான செய்திக்கு: ஒப்புகை சீட்டு எண்ணுவதை கண்காணிக்க தனி முகவரை நியமிக்க அனுமதிக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

திருநெல்வேலி, தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. விரிவான செய்திக்கு: நாளை காலை வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது: நெல்லை, குற்றாலத்தில் ஏற்பாடுகள்; 9 மணிக்கு மேல் முன்னிலை நிலவரம் தெரியும்

மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொகுதிக்கு எத்தனை சுற்றுகள் எண்ணப்படுகின்றன என்பது குறித்த விவரத்தை அறிய: மக்களவை, சட்டப்பேரவை தொகுதிகள்: தொகுதிவாரியாக வாக்கு எண்ணிக்கை சுற்று விவரம்

வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதை முன்னிட்டு நாளை (மே 23) தேனியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு: வாக்கு எண்ணிக்கைக்காக தேனியில் போக்குவரத்து மாற்றம்

சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ராணி மேரி கல்லூரிக்குச் சென்று பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்தார். விரிவான செய்திக்கு: வாக்கு எண்ணும் மையங்களில் சென்னை காவல் ஆணையர் நேரில் ஆய்வு

பாஜக வாக்காளர்கள் பெருமளவு பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி வாக்களித்துள்ளதாக ‘தி இந்து’ மற்றும் சிஎஸ்டிஎஸ் -லோக்நிதி நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதேசமயம் காங்கிரஸ் வாக்காளர்கள் பெருமளவு கட்சிக்காக வாக்களித்துள்ளனர். விரிவான செய்திக்கு: கட்சிக்காக வாக்களித்த ‘காங்கிரஸ்’ : பிரதமருக்காக வாக்களித்த ‘பாஜக’

தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்னரே 2000 கிலோ இனிப்பு தயார் செய்ய பாஜக வேட்பாளர் ஒருவர் ஆர்டர் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. முழு செய்திக்கு: தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்னரே 2000 கிலோ இனிப்பு தயார் செய்ய ஆர்டர் கொடுத்த பாஜக வேட்பாளர்: மும்பையில் ருசிகரம்

மக்களவைத் தேர்தலில் எதனை முன்னிறுத்தி மக்கள் வாக்களிக்கின்றனர் என்பது தொடர்பாக ‘தி இந்து’ மற்றும் சிஎஸ்டிஎஸ் -லோக்நிதி நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் 3 மூன்று தேர்தல்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. விரிவான செய்திக்கு: கட்சியா, வேட்பாளரா, பிரதமரா: யாருக்காக வாக்கு? - கருத்துக் கணிப்பில் தகவல்

 

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close