மும்பை கார் விபத்து குற்றவாளி மது அருந்திய பார் இடிப்பு


மும்பை: மும்பை வொர்லி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதீப் நகாவா (50) என்பவர் தனது மனைவி காவேரியுடன் (45) ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். இவர்கள்மீது வேகமாக வந்த கார் மோதியதில் பிரதீப் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தார். காருக்கு அடியில் சிக்கிக் கொண்ட காவேரி சுமார் 1.5 கி.மீ. தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணையில் காரைஓட்டியது ஆளும் சிவசேனா கட்சியின் உள்ளூர் தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் மிகிர் ஷா எனத் தெரியவந்தது. காரில் அவருக்கு அருகில் இருந்த டிரைவர் ராஜரிஷி பிடாவத், அந்தப் பெண் மீது இரண்டாவது முறையாக காரை ஏற்றியதும் தெரியவந்தது. தலைமறைவான மிகிர் ஷாவை 2 நாட்களுக்கு பிறகுபோலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் விபத்துக்கு சில மணி நேரத்துக்கு முன் மும்பையின் ஜுகு தாரா சாலையில் உள்ள மதுபான கூடத்தில் மிகிர் ஷா மது அருந்தியதாக கூறப்படுகிறது. அந்த மதுபானக் கூடத்தை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று இடித்து அகற்றினர்.

தந்தை நீக்கம்: இந்நிலையில் மிகிர் ஷாதாமதமாக கைது செய்யப்பட் டுள்ளதால் அவரது ரத்தப் பரிசோதனையில் மதுவின் தடயங்கள் இருக்காது என இறந்த பெண்ணின் குடும்பத்தினர் அச்சம் தெரிவித்துள்ள னர். இதற்கிடையில் மிகிர் ஷாவின் தந்தை ராஜேஷ் ஷாவை கட்சிப் பொறுப்பில் இருந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நீக்கியுள்ளார்.