[X] Close

7 வயது சிறுவனுக்கு தவறான ஆப்ரேஷன்: மருத்துவரை சஸ்பெண்ட் செய்த கேரள அமைச்சர்


7

  • kamadenu
  • Posted: 22 May, 2019 15:24 pm
  • அ+ அ-

-ஐஏஎன்எஸ்

கேரளாவில் 7 வயது சிறுவனுக்கு தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்த அரசு மருத்துவரை சஸ்பெண்ட் செய்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா உத்தரவிட்டுள்ளார்.

இன்னொரு சிறுவனுக்கு செய்ய வேண்டிய குடலிறக்க அறுவை சிகிச்சையை அதே பெயர் கொண்ட வேறு ஒரு சிறுவனுக்கு தவறுதலாக செய்த சம்பவம் கேரளாவின் மலபார் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்தது.

ஒரு மூக்கு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவன் அதற்கு பதிலாக ஹெர்னியா எனப்படும் குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டான்.

இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு இதற்குக் காரணமான அரசு அறுவை சிகிச்சை நிபுணர் தனது தவறை ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா வெளியிட்டுள்ள அறிக்கை:

''நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஈடுபடுபவர்கள் தவறு செய்தால் அவர்கள் மீது எந்தவிதமான சலுகையும் காட்டப்பட மாட்டாது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில் எந்தவித தயக்கமும் இல்லை.

மலபார் மாவட்டத்தில், மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவனுக்குத் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். இவ்வழக்கு குறித்து ஒரு விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதே வேளையில் சிறுவனை பழைய நிலைக்குக் கொண்டுவர உரிய சிகிச்சை மாநில அரசு செலவிலேயே அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிறுவன் நன்றாகக் குணமடைந்து வருகிறான்''.

இவ்வாறு அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close