[X] Close

அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது; விழிப்புடன் இருங்கள்: காங்., தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்


24

  • kamadenu
  • Posted: 22 May, 2019 14:44 pm
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ள நிலையில் காங்கிரஸ் தொண்டர்கள் அச்சப்பட வேண்டாம் என ராகுல் காந்தி ட்விட்டர் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. நாளை மே 23 வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது.  மக்களவைத் தேர்தல் கருத்து கணிப்புகள் பெரும்பாலனவை மீண்டும் மோடி ஆட்சியே அமையும் எனத் தெரிவித்துள்ள நிலையில் ராகுல் காந்தி ட்வீட் செய்திருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது. விழிப்புடன் இருங்கள். கண்காணியுங்கள் ஆனால் அச்சப்படாதீர்கள். நீங்கள் உண்மைக்காக போராடுகிறீர்கள். கருத்துக் கணிப்பு முடிவுகளால் மனம் உடைந்துவிடாதீர்கள். காங்கிரஸ் மீதும், உங்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் கடின உழைப்புக்கு பலனில்லாமல் போகாது. ஜெய் ஹிந்த்"

இவ்வாறு ராகுல் காந்தி இந்தியில் ட்வீட் செய்திருக்கிறார்.

இன்று ராகுல்.. அன்று பிரியங்கா

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விடுத்த ஆடியோ செய்தியில், "எனது அருமை கட்சித் தொண்டர்களே, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் காரணமாக மனம் தளர்ந்து விடாதீர்கள். இவை போலியானவை. உங்கள் நம்பிக்கையை தகர்ப்பதற்காகவே இவை பரவச் செய்யப்படுகின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் நீங்கள் தொடர்ந்து விழிப்புடனும் கண்காணிப்புடனும் இருப்பது மிகவும் அவசியம். நமது கடின உழைப்பு வீண் போகாது. நிச்சயம் பலன் அளிக்கும். நம்பிக்கையுடன் இருங்கள்" என்று கூறியிருந்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close