[X] Close

பாலக்கோட் தாக்குதலின்போது எம்ஐ-17 ரக ஹெலிகாப்டரை தவறுதலாக விமானப்படை சுட்டதா?: உயர் அதிகாரி திடீர் இடமாற்றம்


17

  • kamadenu
  • Posted: 22 May, 2019 13:22 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

பாகிஸ்தானின் பாலகோட் தாக்குதல் நடந்தபின் ஸ்ரீநகரின் பட்காம் பகுதியில் எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில், முதலில் விபத்து எனக் கூறப்பட்ட நிலையில், இப்போது தவறுதலாக விமானப்படையே சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதற்குள் ஸ்ரீநகர் விமானப்படையின் கமான்டிங் அதிகாரி(ஏஓசி) பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படையினர் கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி பாலகோட்டில் தாக்குதல் நடத்திவிட்டு திரும்பினார்கள். அப்போது, வான்வெளியில் இந்திய விமானப்படையின் போர் விமானங்களுக்கும், பாகிஸ்தான் போர் விமானங்களுக்கும் இடையே துரத்தல் மோதல் ஏற்பட்டது.

அப்போது காஷ்மீர் அருகே பட்காம் பகுதியில் இந்திய விமானப்படையின் எம்-17 ரக ஹெலிகாப்டரை பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் எம்ஐ ஹெலிகாப்டரில் இருந்த 6 விமானப்படை வீரர்கள், பொது மக்கள் ஒருவர் என 7 பேர் உயிரிழந்தனர்.

முதலில் இது ஹெலிகாப்டர் விபத்து என்று கூறப்பட்ட நிலையில், அதன்பின் நடந்த விசாரணையில் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் என தவறுதலாக நினைத்து இந்திய விமானப்படையினரே சொந்த ஹெலிகாப்டரை சுட்டுவீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகின.

 இந்த விவகாரம் முதலில் வெளியேவராமல் இருந்தது.விமானப்படை சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும் முன்னரே, ஸ்ரீநகர் விமானப்படையின் கமான்டிங் அதிகாரி(ஏஓசி) திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து விமானப்படை வட்டாரங்கள் கூறுகையில், " பணியிடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரியிடம்,  எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் உண்மையில் எந்திரக் கோளாறால் விழுந்து நொறுங்கியதா அல்லது தவறுதலாக விமானப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்று விசாரணை நடத்தப்பட்டு தகவல்கள் பெறப்பட்டன.

இந்த விசாரணையைத் தொடர்ந்து  அந்த அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விசாரணை அறிக்கையின் முடிவில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள கமாண்டிங் ஆபிஸர் குற்றம் செய்தவராக இருந்தால் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்திய விமானப்படையினரே எம்ஐ-17 ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினார்களா என்ற கேள்விக்கு இந்திய விமானப்படை இதுவரை அதிகாரப்பூர்வமாக பதில் அளிக்கவில்லை.

நிலத்தில் இருந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை மூலம் ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதா, அல்லது இந்திய விமானப்படையின் சொந்த ஹெலிகாப்டர் என்பதை கண்டறியும் கருவியான (ஐஎப்எப்) சிஸ்டன் செயல்படுத்தப்படாமல் இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஐஎப்எப்(Identification of Friend or Foe) என்ற முறை என்பது ரேடாரில் நமது நாட்டு சொந்த விமானம், ஹெலிகாப்டர் என்றால் தனி அடையாளமும், வேறுநாட்டு விமானம், ஹெலிகாப்டர் என்றால் தனி அடையாளத்தையும் காட்டும் கருவியாகும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close