[X] Close

ஒடிசாவில் கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி; இருவர் படுகாயம்


5

  • kamadenu
  • Posted: 22 May, 2019 12:56 pm
  • அ+ அ-

ஒடிசாவில் நடைபெற்ற கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஒடிசாவின் 26-வது தேசிய நெடுஞ்சாலையில் ஜரிங் என்ற பகுதியில் உறவினர்கள் 7 பேர் ஒரே காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்துகொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, காரின் மீது மோதியது.

இதில் கார் அப்பளமாக நொறுங்கியது. காருக்குள் இருந்தவர்கள் வெளியே வரமுடியாமல், உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.இதையடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து இன்று அதிகாலை நேரத்தில் நடந்துள்ளது.

சம்பவத்தை அறிந்த காவல்துறை அதிகாரிகள், காயமடைந்தவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close