[X] Close

நடைமுறையில் நேர்மையில்லை எனில், நியாயமான தேர்தலை எப்படி நடத்தமுடியும்?: தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி


  • kamadenu
  • Posted: 22 May, 2019 12:53 pm
  • அ+ அ-

-பிடிஐ

தேர்தல் ஆணையம் தனது இருண்ட ரகசியங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளைப் பயன்படுத்த விரும்புவதன் மூலம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தையே தேர்தல் ஆணையம் மீறி வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒருநாள் உள்ள நிலையில் காங்கிரஸ் இக்குற்றச்சாட்டை இன்று (புதன்கிழமை) முன்வைத்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளில் மாறுபட்ட கருத்துகள் இடம்பெற வேண்டுமென்று தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தலைமைத் தேர்தல் ஆணையருக்கு 3 முறை எழுத்து மூலம் கோரிக்கை வைத்தார். அப்படியில்லை எனில் தான் நடத்தை விதிமுறை நடைமுறைகளிலிருந்து விலகிவிடுவதாகவும் அவர் அந்தக் கடிதங்களில் தெரிவித்திருந்தார்.

தேர்தல் ஆணையர் லாசாவின் கருத்துகளை மீறி முழு ஆணையமும் செயல்பட்டு வரும் நிலையில் அவர் முன்வைத்த விவாதங்களைப் பதிவு செய்ய வேண்டாம் என ஆணையம் நேற்று முடிவு செய்தது.

அவரது கோரிக்கைக்கு மாறாக, ''வேறுபட்ட/மாறுபட்ட கருத்துகளுக்கு தேர்தல் நடத்தை விதி உத்தரவுகளில் இடமளிக்கப்பட மாட்டாது'' என்று 2:1 என்ற பெரும்பான்மை முடிவுகளின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நேற்று முடிவெடுத்தது. இம்முடிவு ஒரு பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்  காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இன்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ''தேர்தல் ஆணையம் தனது நடைமுறைகளில் நேர்மையாக நடந்துகொள்ள முடியவில்லை எனில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை எப்படி உறுதி செய்யமுடியும்?

தேர்தல் ஆணையர் அசோக் லாசாவின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்ததன்மூலம் அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து தேர்தல் ஆணையம் நழுவியுள்ளது.மேலும், அந்தக் கருத்து வேறுபாடுகள் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் வாக்கெடுப்பில் கண்காணிப்பு தேவை என்றும் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. 

ஆனால், இதுவரையில்லாத வகையில் தேர்தல் ஆணையம் தனது கடமைகளைச் செய்ய இருண்ட ரகசியங்களுக்கான முன்னோடியாக ஒதுக்கப்பட்ட அறைகளை அமைக்க முயற்சிக்கிறது. இது ஒரு அரசியலமைப்புக்கு எதிரானது'' என்று தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய விஷயத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் இரண்டு உறுப்பினர்கள் - லாவாசா மற்றும் சுஷில் சந்திரா - அடங்கிய குழு விவாதித்தது.

பின்னர் கருத்து வேறுபாடுகள் குறித்து தேர்தல் ஆணையம், ''சிறுபான்மை கருத்துகள் கோப்புகளில் இடம்பெறும் பதிவுகளின் ஒரு பகுதியாக இருக்கும். ஆனால் உத்தரவின் பகுதியாக இருக்காது'' என்று தெரிவித்துள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close