[X] Close

வடக்கு, மேற்கு, கிழக்கு மாநிலங்கள் மோடிக்கு ஆதரவு; கைவிட்ட தென் மாநிலங்கள்- நாடுதழுவிய அளவில் விரிவான கருத்துக் கணிப்பு


  • kamadenu
  • Posted: 22 May, 2019 11:13 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் எவ்வளவு வாக்குகள் பெறும் என மாநிலங்கள் வாரியான விவரம் வெளியாகியுள்ளது. வடக்கு, மேற்கு, கிழக்கு மாநிலங்களில் பாஜக ஆதிக்கம் செலுத்தும் நிலையில் தென் மாநிலங்களில் அக்கட்சியால் வாக்குகளை பெற முடியவில்லை.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 -ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை நடை பெறுகிறது. இந்தநிலையில் ‘தி இந்து’ மற்றும் சிஎஸ்டிஎஸ் -லோக்நிதி நிறுவனம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.

நாடுதழுவிய அளவில் பிரதமர் மோடிக்கு  44% அளவில் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 24% ஆதரவு மட்டுமே உள்ளது.

இந்தி மொழி பேசும் மாநிலங்களில் பிரதமர் மோடிக்கு தேசிய சராசரியை விடவும் கூடுதலாக உள்ளது கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெருமளவு மக்கள் கட்சி மற்றும் வேட்பாளர்களை முன்னிறுத்தி வாக்களித்துள்ளனர். அதேசமயம் இந்தி மொழி பேசும் மாநிலங்களில் மக்கள் பிரதமரை முன்னிறுத்தி அதிகஅளவு வாக்களித்துள்ளனர்.

நாடுதழுவிய அளவில் பாஜக கூட்டணிக்கு 42 சதவீதமும், காங்கிரஸ் கூட்டணிக்கு 30 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

வடக்கு, மேற்கு, கிழக்கில் பாஜக

SHAH-MODI-KESAVAN.jpg 

பாஜக கூட்டணிக்கு வட மற்றும் மேற்கு மாநிலங்கள் பெரிய அளவில் கைகொடுக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது குறிப்பாக, டெல்லி, ஹரியாணா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் பெரிய அளவில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகவே தெரிகிறது. கிழக்கு பகுதியை பொறுத்வரையில் பிஹார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜகவுக்கு பெருமளவு வாக்குகள் கிடைத்துள்ளன. உத்தர பிரதேசத்திலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் நிலையில் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணியை விட பாஜகவுக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கவே வாய்ப்புள்ளது. ஒடிசாவிலும், மேற்குவங்கத்திலும் எதிர்பாராத அளவுக்கு பாஜகவுக்கு அதிகமான வாக்குகள் கிடைப்பதும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

 

மாநிலங்கள் வாரியாக கட்சிகள் பெறக்கூடிய வாக்கு சதவீதம்

 

மாநிலங்கள்காங்கிரஸ் கூட்டணிபாஜக கூட்டணிபிற கட்சிகள்
ஆந்திரா5%7%ஓய்எஸ்ஆர் 43%, தெலுங்குதேசம்: 38%
அசாம்37%50%ஏஐயுடிஎப்: 6%
பிஹார்36%54%பிறர் 10%
டெல்லி26%48%ஆம் ஆத்மி 19%
குஜராத்34%60%பிறர்6%
ஹரியாணா28%48%ஜேஜேபி 10%, லோக்தளம் 10%
கர்நாடகா49%45%பிறர் 6%
கேரளா42%15%இடதுசாரி 35%
மத்திய பிரதேசம்41%48%பிஎஸ்பி 6%
மகாராஷ்டிரா32%53%பிறர் 15%
ஒடிசா10%42%பிஜூ ஜனதாதளம் 40%
ராஜஸ்தான்39%49%பிஎஸ்பி 4%
தமிழ்நாடு4735%அமமுக 9%
தெலங்கானா23%14%டிஆர்எஸ் 47%
உத்தர பிரதேசம்9%44%சமாஜ்வாதி- பிஎஸ்பி 41%
மேற்குவங்கம்9%37%திரிணாமுல் 39%, இடதுசாரி 11%

 

பாஜகவை கைவிட்ட தென் மாநிலங்கள்

download.jpg 

அதேசமயம் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் நிலைமை மாறியுள்ளது.தமிழகத்தில் நிலைமை முற்றிலுமாக மாற்றமாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையிலும் அதிமுக கூட்டணிக்கு மிக குறைவான வாக்குகளும், அதேசமயம் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய அளவில் வாக்குகளும் கிடைக்கும் தெரிய வந்துள்ளது.

கேரளாவில் காங்கிரஸூம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மாநிலக் கட்சிகளும் கோலோச்சுகின்றன. கர்நாடகாவில் பாஜக - காங்கிரஸ் அணிகள் இடையே சமபலமான பல போட்டி இருப்பதை ‘தி இந்து’ நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close