[X] Close

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கம்


  • kamadenu
  • Posted: 22 May, 2019 11:12 am
  • அ+ அ-

அந்தமான்  நிக்கோபார் தீவுகளில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய புவியியல் மையம் தரப்பில் , “அந்தமான்  மையப் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை 6.09 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கத்தின் ஆழம் 10 கிலோமீட்டர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் நிகோபர் தீவுகளில் செவ்வாய்க்கிழமை 4.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த  நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இங்கு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி மட்டுமே 20 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close