[X] Close

மக்களவைத் தேர்தலில் முந்தும் கூட்டணி எது? - ‘தி இந்து’ கருத்துக் கணிப்பு


  • kamadenu
  • Posted: 22 May, 2019 09:50 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி பெற வாய்ப்புள்ள வாக்குகள் குறித்த விவரம் ‘தி இந்து’ மற்றும் சிஎஸ்டிஎஸ் -லோக்நிதி நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 -ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை நடை பெறுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கடந்த 19-ம் தேதி வெளியாகின.

இதில் அதிக இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

இந்தநிலையில் ‘தி இந்து’ மற்றும் சிஎஸ்டிஎஸ் -லோக்நிதி நிறுவனம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.

‘தி இந்து’ மற்றும் சிஎஸ்டிஎஸ் -லோக்நிதி நிறுவனம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது. வாக்களித்த வாக்காளர்களின் மனநிலையை பதிவு செய்யும் வகையில் பல்வேறு கேள்விகள் முன் வைக்கப்பட்டன. அதனடிப்படையில் திரட்டப்பட்ட தகவல்களை வெளியிட்டு வருகிறது.

அந்த அடிப்படையில், பாஜக அரசு மீது அதிருப்தி இருந்தாலும் மோடியின் தலைமை மீது இருந்து ஈர்ப்பு மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது தெரிவித்துள்ளது. பிரதமர் பதவிக்கு மோடி முன்னிறுத்தப்பட்டதால் வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கூட பாஜகவுக்கு வாக்களித்துள்ள விவரமும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெருமளவு மக்கள் கட்சி மற்றும் வேட்பாளர்களை முன்னிறுத்தி வாக்களித்துள்ளனர். அதேசமயம் இந்தி மொழி பேசும் மாநிலங்களில் மக்கள் பிரதமரை முன்னிறுத்தி அதிகஅளவு வாக்களித்துள்ளனர்.

இதன் மூலம் தேசிய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிகமான வாக்குகளை பெறும் என தெரிய வந்துள்ளது. தேசிய அளவில் ஒட்டுமொத்தமாக பல்வேறு அணிகளும் பெறக்கூடிய வாக்கு சதவீதம் வருமாறு:

 

கூட்டணிவாக்கு சதவீதம்
பாஜக கூட்டணி:40%- 42% வாக்குகள்
காங்கிரஸ் கூட்டணி:28%- 30%
பிறர்:18%- 20%
பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி அணி:8%- 9%
இடதுசாரிகள்:2%- 3%

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close