[X] Close

தூங்கி எழுந்தார்... தன் 6 மாதக் குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்தார்.. மீண்டும் தூங்கச் சென்றார்: ராஜஸ்தானில் பயங்கரம்


6

  • kamadenu
  • Posted: 21 May, 2019 20:07 pm
  • அ+ அ-

-பிடிஐ

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் வாழும் 35 வயது பெண்மணி தன் 6 மாதக் குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்துக் கொலை செய்ததாக போலீஸார் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். இந்தத் தாய் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

 

தீபிகா குஜ்ஜார் என்ற இந்தப் பெண் தன் கணவன், குடும்பத்துடன் ராஜஸ்தான், கோட்டா சரஸ்வதி காலனியில் வசித்து வந்தார்.  இவர் கடந்த ஞாயிறன்று நள்ளிரவில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து திடீரென விழித்துக் கொண்டு தன் 6 மாத குழந்தையை மாடிக்கு எடுத்துச் சென்று தண்ணீர் டாங்கில் மூழ்கடித்து விட்டு மீண்டும் திரும்பி வந்து உறங்கியுள்ளார்.

 

இவரைக் கைது செய்து விசாரித்த போது தான் ஏன் அப்படிச் செய்தேன் என்று தெரியவில்லை என்று போலீஸாரிடம் கண்ணீர் விட்டுள்ளார். ஆனால் கணவர் சீதாராம் குஜ்ஜார், மாமியார் ஆகியோர் பதற்றமடைந்து  குழந்தையைக் காணாமல் தேடிய போது இவரும் சேர்ந்து தேடி நாடகமாடியுள்ளார்.

 

கடைசியில் மாமியார்தான் தண்ணீர் டாங்கில் குழந்தை இறந்து கிடந்ததைப் பார்த்துள்ளார். ஞாயிறன்று இந்தப் படுபாதகக் கொலை செய்த தீபிகா குஜ்ஜார் மறுநாள் வரை நாடகமாடியுள்ளார்.

 

போலீஸார் கைது செய்து விசாரித்த பிறகு அழுதபடியே குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் தீபிகா குஜ்ஜார்.

 

ஆனால் கொலையாளிக்கு மனநலப் பாதிப்பு எதுவும் இருப்பதாக தெரியவில்லை என்று போலீஸார் கூறுகின்றனர். ஏற்கெனவே 2 குழந்தைகள் இயற்கை மரணம் அடைந்த நிலையில் இந்தக் குழந்தையையும் அவர் ஏன் கொன்றார் என்பது போலீஸுக்கே புரியாத புதிராக உள்ளது. காரணம் என்னவென்று போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close