[X] Close

காங்கிரஸ், நேஷனல் ஹெரால்டுக்கு எதிரான அவதூறு வழக்கை வாபஸ் பெற அனில் அம்பானி முடிவு


  • kamadenu
  • Posted: 21 May, 2019 19:50 pm
  • அ+ அ-

-பிடிஐ

சர்ச்சைக்குரிய ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பேசப்பட்ட, எழுதப்பட்ட கருத்துகளுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீது அவதூறு வழக்குத் தொடர்ந்த அனில் அம்பானி, வழக்கை வாபஸ் பெற முடிவெடுத்துள்ளார்.

 

காங்கிரஸ் தலைவர்கள், நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீது ரூ.5000 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு அனில் அம்பானி தரப்பில் அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் அனில் அம்பானி சார்பு வழக்கறிஞர் ராசேஷ் பாரிக் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “வழக்கை வாபஸ் பெற முடிவு எடுத்துள்ளோம் இந்தத் தகவலை அவர்கள் தரப்புக்கும் தெரிவித்து விட்டோம்” என்றார்.

 

நீதிமன்றம் கோடைவிடுமுறை முடிந்து மீண்டும் இயங்கத் தொடங்கும் போது அவதூறு வழக்கை வாபஸ் பெறுவதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வழக்கு முடிக்கப்படும் என்று நேஷனல் ஹெரால்டு தரப்பு வழக்கறிஞர் பி.எஸ்.சம்பனேரி தெரிவித்தார்.

 

மோடி ரஃபேல் ஒப்பந்தத்தை அறிவிப்பதற்கு 10 நாட்கள் முன்னதாக அனில் அம்பானி ரிலியன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார் என்ற தலைப்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் கட்டுரை வெளியானதை அடுத்து அனில் அம்பானி தரப்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close