[X] Close

1 ரூபாய்க்கு இறுதிச் சடங்கு: திகைப்பில் ஆழ்த்தும் தெலங்கானா நகரம்


1

  • kamadenu
  • Posted: 21 May, 2019 18:19 pm
  • அ+ அ-

-ஐஏஎன்எஸ்

மரணமடைந்தவர்களுக்கு ஒரு ரூபாயில் இறுதிச் சடங்கு நடத்த, தெலங்கானாவின் கரீம் நகர் நகராட்சி திட்டமிட்டுள்ளது.

நடுத்தர வகுப்புக்குக் கீழ் இருப்பவர்களுக்கும் வறுமை விளிம்பில் இருக்கும் குடும்பங்களுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அண்டிம் யாத்ரா அக்ரி சஃபார் என்ற பெயரில் கரீம்நகர் முனிசிபல் கார்ப்பரேஷன் (கேஎம்சி) இந்தத் திட்டத்தை ஜூன் 15 முதல் செயல்படுத்த உள்ளது.

இதுகுறித்துப் பேசிய கேஎம்சி மேயர் ரவீந்தர் சிங், ''மூன்று மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும். இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வது, பூஜைகள், இறுதிச் சடங்குகளைச் செய்வது, எரிக்க மரக்கட்டைகள், மண்ணெண்ணெய் அளிப்பது, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு உடல்களைப் புதைக்க உதவுவது என அனைத்துப் பணிகளையும் செய்து கொடுக்க உள்ளோம். இதற்கு 1 ரூபாய் செலுத்தினால் போதும்.

ஏழைகளும் முடியாதவர்களும் கூட, இறந்த பிறகு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே எங்களின் ஆசை. இதற்கு சாதி, மதம் பிரச்சினை இல்லை. 1 ரூபாய் செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொண்டால் போதும்.

கேஎம்சியில் பணிபுரியும் 2 ஆயிரம் ஊழியர்கள் தங்களின் பகுதிகளில் இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

உடலை வைக்கத் தேவைப்படும் வீடுகளுக்கு குளிர்பதனப் பெட்டியையும் இலவசமாக வழங்க உள்ளோம். 50 நபர்களுக்கு இலவச உணவும் உண்டு. இந்த உணவு கேஎம்சியின் ரூ.5 உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

உடனடி இறப்புச் சான்றிதழ்

அதேபோல சம்பந்தப்பட்ட குடும்பங்கள் இறப்புச் சான்றிதழுக்காக அலைய வேண்டியதில்லை. இறுதிச் சடங்குகளை முடித்த கையோடு இறப்புச் சான்றிதழையும் வழங்கி விடுவோம். இந்தத் திட்டத்துக்கு ஆரம்ப கட்டமாக ரூ.1.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது'' என்றார் ரவீந்தர் சிங்.

இந்தத் திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் அனைவரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close