[X] Close

கட்சிக்காக வாக்களித்த ‘காங்கிரஸ்’ : பிரதமருக்காக வாக்களித்த ‘பாஜக’


  • kamadenu
  • Posted: 21 May, 2019 15:14 pm
  • அ+ அ-

பாஜக வாக்காளர்கள் பெருமளவு பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி வாக்களித்துள்ளதாக ‘தி இந்து’ மற்றும் சிஎஸ்டிஎஸ் -லோக்நிதி நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதேசமயம் காங்கிரஸ் வாக்காளர்கள் பெருமளவு கட்சிக்காக வாக்களித்துள்ளனர்.

‘தி இந்து’ மற்றும் சிஎஸ்டிஎஸ் -லோக்நிதி நிறுவனம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது. பாஜக அரசு மீது அதிருப்தி இருந்தாலும் மோடியின் தலைமை மீது இருந்து ஈர்ப்பு மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது தெரிவித்துள்ளது. பிரதமர் பதவிக்கு மோடி முன்னிறுத்தப்பட்டதால் வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கூட பாஜகவுக்கு வாக்களித்துள்ள விவரமும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெருமளவு மக்கள் கட்சி மற்றும் வேட்பாளர்களை முன்னிறுத்தி வாக்களித்துள்ளனர். அதேசமயம் இந்தி மொழி பேசும் மாநிலங்களில் மக்கள் பிரதமரை முன்னிறுத்தி அதிகஅளவு வாக்களித்துள்ளனர்.

கட்சிக்காக வாக்களித்தீர்களா, வேட்பாளரை பார்த்து வாக்களித்தீர்களா, பிரதமர் யார் என்பதை முன் வைத்து வாக்களித்தீ்ர்களா என கேட்கப்பட்டபோது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வாக்காளர்களும் வெவ்வேறு விதமான கருத்துக்களை முன்வைத்தனர். காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் பெருமளவு கட்சிக்காக வாக்களித்துள்ளனர். அதேசமயம் பாஜகவினர் பிரதமர் பதவியில் யார் அமர வேண்டும் என்பதை மனதில் கொண்டு வாக்களித்ததாக தெரிவித்தனர்.

 

  வேட்பாளை விட கட்சி முக்கியம் கட்சியை  விட வேட்பாளர் முக்கியம் பிரதமர் வேட்பாளரே முக்கியம்
காங்கிரஸ் வாக்காளர்கள் 54 34 7
காங்கிரஸ் கூட்டணி வாக்காளர்கள் 46 44 5
பாஜக வாக்காளர்கள் 40 26 29
பாஜக கூட்டணி வாக்காளர்கள் 35 35 25
பகுஜன் சமாஜ் வாக்காளர்கள் 50 32 10
இடதுசாரி கட்சிகள் வாக்காளர்கள் 55 23 16
இதர கட்சி வாக்காளர்கள் 53 35 5
மொத்தம் 46 32 17

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close