[X] Close

தோல்வி பயத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை சொல்வதா?- நிதிஷ் குமார்


  • kamadenu
  • Posted: 21 May, 2019 14:48 pm
  • அ+ அ-

-ஏஎன்ஐ

தேர்தலில் தோல்வி பெறுவது உறுதியானால் உடனே அந்தக் கட்சிகள் தேர்தல் நடைமுறையையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையும் குறை சொல்வது வாடிக்கையாகிவிட்டது. இது போலித்தனம் எனக் கூறியுள்ளார் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் (எக்ஸிட் போல்ஸ்) தெரிவித்துள்ளன.

இதனையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு விருந்து அளிக்கிறார் அமித் ஷா. இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாட்னா விமான நிலையம் வந்த நிதிஷ் குமார், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக முன்வைக்கப்படும் புகார் எல்லாமே போலியானது.

இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் தேர்தலில் வெளிப்படைத்தன்மை நிலவுகிறது. ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எப்படி கோளாறு செய்ய இயலும். ஒவ்வொரு முறை இந்த தொழில்நுட்பம் மீது கேள்வி எழுப்பப்படும்போதும் தேர்தல் ஆணையம் அதற்கான விளக்கத்தை அளித்திருக்கிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவதற்கு முன்னதாகவே பயன்பாட்டில் இருக்கின்றன.

தோற்றுப் போவோம் என அச்சம் வரும்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அரசியல் கட்சிகள் புகார் கூறுவது வழக்கமாகிவிட்டது. எனவே எதிர்க்கட்சிகள் கூறும் புகார் அடிப்படையற்றது.

இறுது முடிவு மே 23-ல் தான் வெளியாகும் என்றாலும், மக்கள் காட்டும் உற்சாகம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிதான் அட்சிக்கு வரும், பிரதமர் மோடிதான் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைப்பார் என்பதை தெளிவாகக் காட்டுகிறது" என்றார்.

பிஹாரில் மஹாராஜ்கஞ்ச், சரன் நாடாளுமன்ற தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டதாக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close