[X] Close

கட்சியா, வேட்பாளரா, பிரதமரா: யாருக்காக வாக்கு? - கருத்துக் கணிப்பில் தகவல்


  • kamadenu
  • Posted: 21 May, 2019 14:24 pm
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் எதனை முன்னிறுத்தி மக்கள் வாக்களிக்கின்றனர் என்பது தொடர்பாக ‘தி இந்து’ மற்றும் சிஎஸ்டிஎஸ் -லோக்நிதி நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் 3 மூன்று தேர்தல்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

‘தி இந்து’ மற்றும் சிஎஸ்டிஎஸ் -லோக்நிதி நிறுவனம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது. பாஜக அரசு மீது அதிருப்தி இருந்தாலும் மோடியின் தலைமை மீது இருந்து ஈர்ப்பு மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது தெரிவித்துள்ளது. பிரதமர் பதவிக்கு மோடி முன்னிறுத்தப்பட்டதால் வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கூட பாஜகவுக்கு வாக்களித்துள்ள விவரமும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெருமளவு மக்கள் கட்சி மற்றும் வேட்பாளர்களை முன்னிறுத்தி வாக்களித்துள்ளனர். அதேசமயம் இந்தி மொழி பேசும் மாநிலங்களில் மக்கள் பிரதமரை முன்னிறுத்தி அதிகஅளவு வாக்களித்துள்ளனர்.

கட்சிக்காக வாக்களித்தீர்களா, வேட்பாளரை பார்த்து வாக்களித்தீர்களா, பிரதமர் யார் என்பதை முன் வைத்து வாக்களித்தீர்களா என்ற கேள்விக்கு 2009, 2014, 2019 ஆகிய மூன்று தேர்தல்களிலும் மக்களின் மனநிலை மாறியுள்ளதை அறியமுடிகிறது.

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முன்பாக எதனை முக்கியமாக கருதுவீர்கள் என்ற கேள்விக்கு கடந்த 3 தேர்தல்களில் மக்கள் முன்னுரிமை கீழ்கண்டவாறு இருந்துள்ளது.

 

ஆண்டு200920142019
கட்சி62%58%46%
வேட்பாளர்24%33%32%
பிரதமர்--17%
கருத்து இல்லை14%9%5%

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close