[X] Close

அப்பாதான் எப்பவுமே என் ஹீரோ: ட்விட்டரில் பழைய புகைப்படத்தை பகிர்ந்து பிரியங்கா காந்தி நெகிழ்ச்சி


  • kamadenu
  • Posted: 21 May, 2019 12:15 pm
  • அ+ அ-

-ஏஎன்ஐ

தனது தந்தையின் நினைவு நாளான இன்று (மே 21) பிரியங்கா காந்தி அவருடன் சிறு வயதில் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார்.

அப்பாதான் எப்போதுமே என் ஹீரோ என்ற பின்னூட்டத்தை அந்த புகைப்படத்துடன் பகிர்ந்திருக்கிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

அவருடைய 28-வது நினைவு நாளை ஒட்டி டெல்லியில் யமுனை நதிக் கரையில் அமைக்கப்பட்டுள்ள வீர் பூமி என்ற நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

காலையிலேயே ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரும் தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

இந்நிலையில் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தந்தை ராஜீவ் காந்தியை கட்டி அணைத்ததுபோல் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து "அப்பாதான் எனக்கு எப்பவுமே ஹீரோ" எனப் பதிவிட்டுள்ளார். மேலும், புகைப்படத்தின் அருகே ஹரிவன்ஷ் ராய் பச்சனின் பிரபலமான கவிதை வரிகளையும் சேர்த்துப் பதிவிட்டுள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close