[X] Close

வேட்பாளர், கட்சிக்காக வாக்களித்த தமிழக மக்கள்; பிரதமருக்காக வாக்களித்த வட மாநில மக்கள்: மாநிலங்கள் வாரியாக விவரம்


  • kamadenu
  • Posted: 21 May, 2019 11:43 am
  • அ+ அ-

-Janarthanaperumal S_50242

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெருமளவு மக்கள் கட்சி மற்றும் வேட்பாளர்களை முன்னிறுத்தி வாக்களித்துள்ளனர். அதேசமயம் இந்தி மொழி பேசும் மாநிலங்களில் மக்கள் பிரதமரை முன்னிறுத்தி அதிகஅளவு வாக்களித்துள்ளனர்.

‘தி இந்து’ மற்றும் சிஎஸ்டிஎஸ் -லோக்நிதி நிறுவனம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது. பாஜக அரசு மீது அதிருப்தி இருந்தாலும் மோடியின் தலைமை மீது இருந்து ஈர்ப்பு மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது தெரிவித்துள்ளது. பிரதமர் பதவிக்கு மோடி முன்னிறுத்தப்பட்டதால் வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கூட பாஜகவுக்கு வாக்களித்துள்ள விவரமும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலங்கள் வாரியாக மக்கள் எதை முன்னிறுத்தி வாக்களிக்கின்றனர் என்ற கருத்தும் கேட்கப்பட்டது.  

பிரதமருக்காக வாக்களித்த வட மாநிலங்கள்

2019-ம் ஆண்டு தேர்தலில் யாருக்காக வாக்களிதர்தீர்கள் என்ற கேள்வியை முன் வைத்தோம். கட்சிக்காக வாக்களித்தீர்களா, வேட்பாளரை பார்த்து வாக்களித்தீர்களா, பிரதமர் யார் என்பதை முன் வைத்து வாக்களித்தீர்களா என்ற கேள்வியை முன் வைத்தோம். அதற்கு மாநிலங்கள் வாரியாக மக்களின் பார்வை மாறி இருந்தனை உணர முடிந்தது. பெரும்பாலான மாநிலங்களில் கட்சிக்காக மக்கள் வாக்களிக்கின்றனர். வேறு சில மாநிலங்களில் வேட்பாளருக்காக வாக்களித்துள்ளனர். பல இடங்களில் பிரதமர யார் என்பதை முன் வைத்து மக்கள் வாக்களித்துள்ளனர். இதில் இந்தி மொழி பேசும் மாநிலங்களில் அதிகமாக பிரதமரை முன்னிறுத்தி வாக்களித்துள்ளது தெரிய வந்துள்ளது. 

 

  கட்சி முக்கியம் வேட்பாளர் முக்கியம் பிரதமர் முக்கியம்
ஆந்திரா 64 31 0
அசாம் 51 31 6
பிஹார் 39 24 35
கோவா 59 33 4
குஜராத் 45 25 25
ஹரியாணா 46 22 23
காஷ்மீர் 44 28 26
கர்நாடகா 48 44 6
கேரளா 59 30 4
மத்திய பிரதேசம் 44 33 20
மகாராஷ்டிரா 54 31 8
மணிப்பூர் 48 41 0
மேகாலயா 36 52 0
நாகாலாந்து 39 42 8
ஒடிசா 28 64 3
ராஜஸ்தான் 36 32 28
தமிழ்நாடு 23 63 8
உத்தரபிரதேசம் 48 20 27
மேற்குவங்கம் 58 26 8
டெல்லி 49 22 22
ஜார்கண்ட் 38 26 31
சத்தீஸ்கர் 48 33 11
உத்தரகண்ட் 45 34 19
தெலங்கானா 59 33 4

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close